காதலிக்க நேரமில்லை விமர்சனம் 3.75/5
காதலிக்க நேரமில்லை விமர்சனம் 3.75/5
ஸ்டோரி…
நித்யா மேனன் காதல் ஒரு பக்கம் ஜெயம் ரவி காதல் ஒரு பக்கம்.. இவர்கள் இருவரும் நேர் எதிர் சிந்தனைகளை கொண்டவர்கள்.
காதலிக்கலாம்.. திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் குழந்தை வேண்டாம் என நினைப்பவர் ஜெயம்ரவி.. இப்போது புதிய பேரை மாற்றி விட்டார் இவர் பெயர் ரவி மோகன்.
உடலுறவு கொள்ளாமல் குழந்தை வேண்டும் என நினைப்பவர் நித்யா மேனன்.. இவர்கள் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை எப்படி உருவானது எப்படி? அதன் பிறகு நடந்தது என்ன? இவர்களுக்கு உறவு இருந்ததா? குழந்தை கிடைத்ததா ? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சிங்கிள் மதராக ஒவ்வொரு சீனிலும் தன் நடிப்பில் சிக்சர் அடிக்கிறார் நித்யா மேனன்.. ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றுக் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து அதை தன் தோழி சித்தி பெற்றோரிடம் சொல்லும் தைரியம் நித்யா வேற லெவல் ரகம்..
கத்தியில்லை ரத்தம் இல்லை ஆனால் கதை இருக்கு.. அதில் தன் கேரக்டரை நிறைவாக செய்ய முடியும் என ஒப்புக்கொண்டு அதை அழகாகவே செய்து இருக்கிறார் ரவி மோகன்..
யோகி பாபு காட்சிகள் சிரிக்க வைக்கிறது.. காமெடி டிரக் என்ற தனியாக இல்லாமல் கதையுடன் பயணிக்க இவரது காமெடியும் உதவியிருக்கிறது..
வித்தியாசமான வேடத்தில் வினய்.. டிஜே பானு, லால், பாடகர் மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி என அனைவரும் கச்சிதம்..
டெக்னீசியன்ஸ்…
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப கேட்க வைக்கிறது… என்னை இழு இழு இழுக்குதடி என்ற பாடல் காதலர்களை மட்டுமல்ல அனைவரையும் ஈர்க்கும்.. பின்னணி இசை சிறப்பு..
ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி.. மென்மையான படத்திற்கு கலர்ஃபுல்லான காட்சிகளை கொடுத்திருக்கிறார்..
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.. தமிழ் சினிமாவில் கொஞ்சம் வில்லங்கமான கதையை புரியும்படி எடிட்டிங் செய்திருக்கிறார்.
கதை எழுதி இயக்கியவர் கிருத்திகா உதயநிதி.. பெண்ணியம் பேசும் பெண்கள்.. மென்மையான ஆண்கள் என அழகாக உணர்வுடன் கலந்து கொடுத்து இருக்கிறார்.
இந்த வேகமான உலகத்தில் எவருக்கும் காதலிக்கும் நேரமில்லை.. ஆனால் அடுத்த தலைமுறைக்காக உழைத்துக் கொண்டிருக்கும் நபர்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்..
ஒரு கட்டத்தில் ரவி & நித்யா இணைய வாய்ப்பு உள்ள சூழ்நிலையில் திடீரென முன்னாள் காதலி பானுவை உள்ளே நுழைத்து அதிலும் ஒரு சுவாரசியம் சேர்த்து இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா..
இதுதான் முடிவாக இருக்கும் என்று யூகிக்க கூடிய காட்சிகள் இருந்தாலும் அதை கையாள்வதில் ஒரு இயக்குனருக்கு சிறந்த படைப்பாற்றல் வேண்டும்.. அதை அழகாகவே திறப்பட செய்து இருக்கிறார் டைரக்டர் கிருத்திகா..
Kadhalikka Neramillai movie review

