FIRST ON NET காயல் விமர்சனம்… சாதிய நீரோடையில் நீந்த தெரியாத மீன்

FIRST ON NET காயல் விமர்சனம்… சாதிய நீரோடையில் நீந்த தெரியாத மீன்

 

FIRST ON NET காயல் விமர்சனம்… சாதிய நீரோடையில் நீந்த தெரியாத மீன்

 

ஸ்டோரி…

அனுமோல் – ஐசக் வர்கீஸ் இருவரும் தம்பதியர்.. இவர்களின் மகள் காயத்ரி இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.. அவர் அமெரிக்காவில் இருக்கிறார்..

காயத்ரி நாயகன் லிங்கேஷை காதலிக்கிறார்.. தந்தை ஒரு போலீஸ்காரராக இருந்தாலும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க ஆனால் அனுமோல் சாதியின் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்..

இதனால் மகள் தற்கொலை செய்து கொள்கிறார்.. மகளின் தற்கொலைக்கு நீ தான் காரணம் என்று தனது மனைவியை குற்றம் சாட்ட இருவருக்கும் பிரிவு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தன் பெற்றோரை சேர்த்து வைக்க நினைத்து தமிழகம் வருகிறார்.. தன் நண்பர் ரமேஷ் திலக் உதவியை நாடுகிறார்.

ஆனால் ஏற்கனவே தன்னுடைய குடும்ப விவகாரத்து பிரச்சினைகள் சிக்கித் தவிக்கும் ரமேஷ் திலக் இவர்களுக்கு உதவ முடியாமல் ஒரு கட்டத்தில் மனைவியின் விபத்து அறிந்து கேரளா செல்கிறார்.. இந்த சூழ்நிலையில்தான் மகளின் காதலன் லிங்கேசை சந்திக்கிறார் ஐசக்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ஐசக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

காதலி காயத்ரியை மறக்க முடியாமல் ஸ்வாகதா காதலை ஏற்க முடியாமல் தவிக்கும் கேரக்டர் லிங்கேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. ஆனால் காயத்ரியை காதலிக்கும் காட்சியிலும் அவருக்கு ரொமான்ஸ் போதவில்லை.

அனுமோல் & ஐசக் உறவு எப்போதும் கீரி பாம்பு போன்றதாகவே காண்பிக்கப்பட்டுள்ளது.. மனைவி மீது கோபப்படுவதும் விரக்தியில் சரக்கு அடிப்பது தான் ஐசக் வேலை..

அழகாக கும்முன்னு அனுமோல்.. ஆனால் இவரின் கதாபாத்திரத்திற்கு போதிய வலுவில்லை.. அழுகை மூஞ்சியாக வருகிறார்.

தைரியமான பெண்ணாக காயத்ரி வந்தாலும்.. ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காட்சி இல்லை..

தன்னுடைய குடும்பப் பிரச்சனையை சுமக்க முடியாமல் அடுத்த பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார் ரமேஷ் திலக்..

நாயகனை சுற்றி சுற்றி ஜொள்ளு வடிக்கும் பெண்ணாக சுவாகதா.. சோகக் கடலில் மூழ்கிய காயலுக்கு கொஞ்சம் கவர்ச்சி மழையை காட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்களும் வரிகளும் அருமை.. ஆனால் இத்தனை பாடல்கள் படத்தில் தேவையா.? ஏற்கனவே படம் ஆமை வேகத்தில் நகர இந்த பாடல்களும் நகர்கிறது..

கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்..

அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இப்படத்தை இயக்கி ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ளார்..

தான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை தொகுத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார் எழுத்தாளர் தமயந்தி.. ஆண்களை விட பெண்களிடம் சாதிய வன்முறை அதிகம் இருப்பதாக காயல் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருந்தார்..

அமைதியாக காணப்படும் பெண்களிடமும் ஆரவாரமான சாதிய வன்முறை இருப்பதாக அனுமோல் கேரக்டர் மூலம் சித்தரித்திருக்கிறார்..

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் அனுமோல்.. ஆனால் அவர் வார்த்தைகளில் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்..

குறும்படமாக சொல்ல முடிக்க வேண்டிய இந்த காயல் படத்தை மெகா சீரியல் போல எழுத்து இயக்கியிருக்கிறார் தமயந்தி.. என்னதான் சொல்ல வரீங்க… எப்ப தான் முடிக்க போறீங்க என்ற மனநிலையை நமக்கு இரண்டாம் பாதியில் நீடிக்கிறது..

ஆக இந்த காயல்… சாதிய நீரோடையில் நீந்த தெரியாத மீன்…

 

Kaayal movie review