ஜாக்கி விமர்சனம்… கிடா மோதல் கில்லாடிகள்

ஜாக்கி விமர்சனம்… கிடா மோதல் கில்லாடிகள்

ஜாக்கி விமர்சனம்… கிடா மோதல் கில்லாடிகள்

 

ஸ்டோரி…

யுவன் கிருஷ்ணா – நாயகன்..

ரிதன் கிருஷ்ணா – வில்லன்..

சேவல் சண்டையைப் போல கிடா சண்டை இந்த படத்தின் மையக்கரு.. இதனால் நாயகனுக்கு வில்லனுக்கும் ஈகோ மோதல் ஏற்படுகிறது.. இவர்களின் பிரச்சினையால் இந்த ஊரே பிளவு பட்டு கிடக்கிறது.. இதனை எடுத்து ஊர் மக்கள் ஒரு முடிவு எடுக்கின்றனர்.. அது என்ன.? அதனால் நன்மையா.? என்பதெல்லாம் மீதிக்கதை..


கேரக்டர்ஸ்…

யுவன் & ரிதன் இருவரும் கிடா சண்டை போல போட்டி போட்டு நடித்துள்ளனர்.. இவர்களின் கேரக்டரும் அவர்களின் ஈடுபாடும் இந்த படத்திற்கு பக்கபலம்.. நாயகனுக்கு கூடுதலாக நாயகியுடன் ரொமான்ஸ்..

நாயகியாக அம்மு அபிராமி.. அழகான கண் அசைவிலும் கவர்கிறார்.. கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு என்பதை நடிப்பில் உணர்த்துகிறார்..

இவர்களுடன்.. மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் மதுரை மண் சார்ந்த பாத்திரமாகவே மாறி இருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் – என்.எஸ்.உதயகுமார்.. மதுரை மண்ணுக்கு அழைத்துச் சென்ற உணர்வை கொடுத்திருக்கிறார்..

சக்தி பாலாஜியின் இசையில் பின்னணி இசை அனல் ரகம்.. முக்கியமாக கிடா சண்டையில் மிரட்டல் ரகம்..

டாக்டர். பிரகாபல் என்பவர் இயக்கி இருக்கிறார்.. வீர விளையாட்டில் ஒன்றான கிடா மோதலை மையப்படுத்தி மண் சார்ந்த திரைப்படமாக கொடுத்திருக்கிறார்…

பெரும்பாலும் ஹீரோ வில்லன் மோதல் என்றால் காதல் குடும்பம் இப்படியாக நகரும்.. இதில் கிடாவை வைத்து ஹீரோ வில்லன் மோதல் கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார்.. பெரிய திருப்புமுனை காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் நேரடியாக கிடா மோதலை பார்த்த உணர்வை ஜாக்கி தருகிறது..

Jockey movie review