ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்..
ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்..
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஒரு நொடி’ படத்தை இயக்கிய பி. மணிவர்மன் இயக்கி இருக்கிறார்..
ஸ்டோரி…
சினிமா இயக்குனராகி விட வேண்டும் என்ற ஆசையில் தன் வாழ்க்கையை சிரமப்பட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார் நாயகன் தமன்.. ஒரு நாள் இவர் தங்கியிருக்கும் வீட்டில் திடீரென பல வெட்டு காயங்களுடன் வந்து விழுகிறார் காளி வெங்கட்.. அப்போது ஒரு ரகசியத்தை சொல்லி மரணம் அடைகிறார்.
அந்த ரகசியத்தில்.. எம்எல்ஏவின் பணம் ₹ 57 கோடியை ஒரு பாழடைந்த மில்லில் மறைத்து வைத்திருக்கிறேன்.. அதை என் மகளின் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொண்டு மீதி பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு மரணம் அடைகிறார்..
ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் தமனும் அவரது நண்பர்களும் அந்த இடத்திற்கு செல்கின்றனர்.. அங்கே சென்ற பின் நண்பர்கள் கொல்லப்படுகின்றனர்.. அந்த மில்லில் நடப்பது என்ன.? அங்கு இருப்பது என்ன? தமன் என்ன செய்தார்.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…
தமன், மால்வி மல்ஹோத்ரா, காளி வெங்கட், மைத்ரேயா, ரக் ஷா செரின், சிவம், அருண், வேலராமமூர்த்தி, முனீஸ்காந்த்
கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாகவே தமன் தன்னை கேரக்டரில் பொருத்தியிருப்பது சிறப்பு.. ஆக்க்ஷனிலும் அதிரடி காட்டி இருக்கிறார்..
ஓரிரு காட்சியில் வந்தாலும் வழக்கம் போல தன் நடிப்பில் கலக்கியிருக்கிறார் காளி வெங்கட்.. அரசியல்வாதியாக வேலராமமூர்த்தி.. பணத்தாசை பிடித்த நபராக முனிஷ்காந்த் உள்ளிட்டோரும் சிறப்பு..
வில்லத்தனம் காட்டிய ஃப்ரெண்ட் கேரக்டரும் நடிப்பில் கவனம் பெறுகிறார்..
கனவு கண்டும் பயப்படும் கேரக்டரில் மால்வி.. நம்மையும் நடிப்பில் பயமுறுத்தி இருக்கிறார்.. இதில் தலைவாசல் விஜய்யும் வருகிறார்.. அந்த கேரக்டர் ஏனோ.??

டெக்னீசியன்ஸ்…
இசை : சஞ்ஜெய் மாணிக்கம்
ஒளிப்பதிவு : கே.ஜி.. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ரசிக்க வைக்கிறது..
ஒரு அம்மா ஒரு குழந்தை பேயாக வருகிறார்கள். அவர்கள் யார் அவர்களின் பின்னணி.? என்பதற்கு வலுவான காட்சிகள் இல்லை.. அதுபோல அடிக்கடி சுற்றி வரும் நாயின் காட்சிக்கும் விளக்கம் இல்லை..
இயக்குனர் – பி. மணிவர்மன்
ஒரு நொடி படத்தில் கவனம் ஈர்த்த மணிவர்மன் இதில் தடுமாறி இருக்கிறார்.. பணத்தைத் தேடிச் செல்லும் ஐந்து நண்பர்களின் கதை என்பதை சொல்ல வந்து.. அதில் பணத்தாசை நாய் பேய் என அனைத்தையும் காட்டி சீரியலாக இழுத்துவிட்டார்..
Jenma Natchathiram movie review

