HOT SPOT 2 MUCH விமர்சனம் 3.75/5.. Boomer GenZ & விஜயகாந்த் ஜெயந்தி-யில் முதல்வர் சிவகார்த்திகேயன்..

HOT SPOT 2 MUCH விமர்சனம் 3.75/5.. Boomer GenZ & விஜயகாந்த் ஜெயந்தி-யில் முதல்வர் சிவகார்த்திகேயன்..

HOT SPOT 2 MUCH விமர்சனம் 3.75/5.. Boomer GenZ & விஜயகாந்த் ஜெயந்தி-யில் முதல்வர் சிவகார்த்திகேயன்..

 

 

ஸ்டோரி…

ஆந்தாலஜி வகையான திரைக்கதை சொல்வதில் கில்லாடி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.. ஏற்கனவே ஹாட்ஸ்பாட் படத்தில் நான்கு வகையான கதைகளை சொல்லியிருந்தார்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒவ்வொரு ருசி என்று சொல்லலாம்.. இந்த ஹாட் ஸ்பாட் டூ மச் படத்தில் 3 வகையான கதைகளை இணைத்து சுவாரசியமாக தொகுத்திருக்கிறார்..

1. DEAR FAN

எம்ஜிஆர் சிவாஜி… ரஜினி கமல்.. விஜய் அஜித்.. தமிழ் சினிமாவில் என்றென்றும் இது போன்ற ரசிகர்களின் மோதல் எடுத்து வருகிறது.. தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப தாதா & ராசா என்ற இரு நடிகர் ரசிகர்கள் மோதி கொள்கிறார்கள்..

ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களை கடத்தி வைத்துக்கொண்டு இரு நடிகர்களும் என்னுடன் கான்ஃபரன்ஸ் காலில் ஒன்றாக பேச வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார் எம் எஸ் பாஸ்கர்… ரசிகர்கள் குடும்பத்தை காப்பாற்ற நடிகர்கள் முன் வந்தார்களா? அவர்கள் ஏன் பேச வேண்டும் என்பதுதான் இந்த கதை..

2.. Black and White

நாகரிக மோகத்தில் உடை அணிந்து குட்டை பாவாடை குட்டை சட்டை போட்டுக் கொண்டு திரியும் மகளுக்கு பாடம் புகட்ட அவரது பாணியிலேயே செல்லும் ஒரு தந்தையின் பாச போராட்டம் தான் இந்த கதை..

Boomer uncle… இதில் பூமர் அங்கிள் உள்ளிட்ட கிண்டல்களும் அடங்கும்..

3.. Yours Lovingly – Love 2025 ஆம் ஆண்டில் இருக்கும் ஆண்.. 2050 ஆம் ஆண்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் காதல் கொள்கிறார்.. இவர் டைம் ட்ராவல் செய்து முன்னோக்கி சென்றால் இவரின் வயது அதிகமாகிவிடும்… அவள் டைம் ட்ராவல் செய்து இந்த 2025 வந்தால் குழந்தையாக மாறிவிடுவாள்… அப்படி இருக்கையில் இவர்களின் காதல் என்ன ஆனது என்பதெல்லாம் கற்பனை கதை..

இதுல… Dink – Double Income No kids

DTR – Define the relationship

3 some.. Live in…

Bench.. Waiting list for Dating…

Vijayakanth Jayanthi..

Tamilnadu CM Sivakarthikeyan..
Opposite leader Vijay Sethupathi

உள்ளிட்ட மேற்கண்ட சுவாரசியமான சம்பவங்கள் அடங்கும்..

கேரக்டர்ஸ்….

பிரியா பவானி சங்கர் – ஷில்பா
* பிரிகிடா சாகா – மதுமிதா
* அஷ்வின் குமார் – யுகன்
* ரக்ஷன் – ஜேம்ஸ்
* ஆதித்யா பாஸ்கர் – சத்யா
* விக்னேஷ் கார்த்திக் – முகமது ஷெரிப்
* கே.ஜே. பாலமணிமார்பன் – கே.ஜே. பாலமணிமார்பன்
* பவானி ஸ்ரீ – நித்யா
* சஞ்சனா திவாரி – ஷர்னிதா
* தம்பி ராமையா – பாஸ்கர்

இதில் விக்னேஷ் கார்த்திக்.. பிரிகிடா.. பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோலில் வந்து செல்கின்றனர்.. ஆல்ரெடி கதையே கெஸ்ட் ரோல் தான்..

தம்பி ராமையா மற்றும் சஞ்சனா பாசப் போராட்ட மோதல் ரசிக்க வைக்கிறது.. மகளுக்காக தந்தை இறங்கி வந்தாலும் மகள் அனுமதிப்பில்லை என்பதை அவர்கள் பாணியில் சொல்லி பிளாஸ்ட் கொடுத்து இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்..

தேவையே இல்லாமல் அடித்துக் கொள்ளும் திருந்தாத ரசிகர்களுக்கு எம் எஸ் பாஸ்கர் மூலம் தீர்வு சொல்லி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

குடும்ப உறவுகள் சமூக கலாச்சாரத்தை எதைப் பற்றியும் கவலைப்படாத சுயநலவாதிகளுக்கு சுளிர் என்ற பாடமும் எடுத்திருக்கிறார்..

இதிலும் ஒரு தயாரிப்பாளரிடம் இயக்குனர் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கதை சொல்பவர் பிரியா பவானி சங்கர்.. பிரியாவுக்கும் பிரிகிடாவுக்கும் ஒரு தனி லவ் ட்ராக்.

இசை & ஒளிப்பதிவு சிறப்பு.. அனைத்தும் சிறப்பு..

ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தில் கலையரசன் கேரக்டர் இடம்பெற்ற எபிசோட் மிகவும் கண்கலங்க வைத்தது… ஆனால் இந்த பாகத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவு என்றாலும் வித்தியாசமாக கதை சொல்லி இருக்கிறார்.. அடுத்தது மூன்றாம் பாகமும் வரும் அதையும் எதிர்பார்த்து காத்திருக்கலாம்..

 

Hot Spot 2 much movie review