ஹிட்லர் விமர்சனம்.. ஹிட் – ஹவர்
ஹிட்லர் விமர்சனம்.. ஹிட் – ஹவர்
ஸ்டோரி…
சென்னையில் தன் நண்பன் ரெட்டின் கிங்சிலியை தேடி வருகிறார் விஜய் ஆண்டனி.. பேங்கில் வேலை செய்து கொண்டே ஒரு பக்கம் நாயகி ரியாவை சுற்றி சுற்றி காதல் கொள்கிறார்..
இந்த நேரத்தில் தேர்தல் வரவே அரசியல்வாதி சரண்ராஜ் தன்னுடைய கருப்பு பணத்தை எல்லாம் வெளியே எடுத்து மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க முயல்கிறார்.
அப்போது பணம் எல்லாம் ஒருவனால் கொள்ளையடிக்கப்படுகிறது.. மேலும் அவன் 5 கொலைகளும் செய்கிறான்.. இதனால் கௌதம் மேனன் தலைமையிலான போலீஸ் வேட்டை தொடர்கிறது..
கோடிக்கணக்கான கருப்பு பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதால் போலீஸிடம் சொல்ல முடியாமல் கொள்ளையனை தேடி வருகிறார் சரண்ராஜ்.
அடுத்தது என்ன நடந்தது.? இன்னும் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தாரா அரசியல்வாதி சரன்ராஜ்..? பணத்தை கொள்ளையடித்தவன் யார் நோக்கம் என்ன? ஐந்து பேரைக் கொன்ற கொலையாளி யார் என போலீஸ் கண்டுபிடித்ததா.? இவர்களுக்கும் விஜய் ஆண்டனிக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் கதை..

கேரக்டர்ஸ்…
Vijay Antony
Riya Suman
Gautham Vasudev Menon
Charanraj
Reddinn Kingsley
Vivek Prasanna
Tamizh (Director)
Aadukalam Naren
ஆக்சன் ரொமான்ஸ் சமூக ஆர்வலர் என வெரைட்டியான நடிப்பில் கவர்கிறார் விஜய் ஆண்டனி.. இவரின் ஹேர் ஸ்டைலும் ரசிக்க வைக்கிறது..
ஒரு பக்கம் போலீஸ் ஒரு பக்கம் அரசியல்வாதி என விறுவிறுப்பான திரைக்கதையில் ஹீரோ கேரக்டர் ஒட்டாமலே செல்கிறது என நினைக்கையில் திடீரென எதிர்பாராத ட்விஸ்ட்டை இடைவேளையில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
நாயகி ரியாவுக்கும் விஜய் ஆண்டனிக்கும் உள்ள சின்ன சின்ன மோதல் ரசிக்க வைக்கிறது.. ‘உனக்கு நான் ராசி இல்லை.. எனக்கு நீ ராசி தான் என்று சுற்றி வரும் காட்சிகள் லவ்வர்ஸ்க்கான ஜாலி சீன்ஸ்..
துறுதுறு பெண்ணாக ரியா சுமன் கவர்கிறார்.. இவரது துடுதுடுப்பான பேச்சு ஸ்டோரி ஸ்பீடுக்கு உதவி இருக்கிறது..
கம்பீரமான போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் கலக்கல்… இவரது ஸ்டைலிஷ் பேச்சு போலீஸ்க்கான கெத்து..
அரசியலில் ஜெயிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்வன் என்ற அரசியல்வாதிக்கு உள்ள திமிரான தோற்றத்தில் சரண்ராஜ் மிளிர்கிறார்.. அவரது கிளீன் ஷேவ் லுக் கூட சிறப்பு..
சரண்ராஜ் தம்பியாக நடித்த இயக்குனர் தமிழும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. சிறுசு என்ற கேரட்டில் வரும் குள்ள மனிதரும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார் இவரது கேரக்டர் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று..
மற்றொரு அரசியல்வாதியாக ஆடுகளம் நரேன்.. ரெட்டின் கிங்சிலி ஒன்லைன் காமெடிகள் சிரிப்புக்கு கேரண்டி.. விவேக் பிரசன்னா கேரக்டர் வலுவில்லை.
டெக்னீசியன்ஸ்…
Written & Directed By: DANA S.A
Produced By T.D.Rajha – D.R. Sanjay Kumar
Dop: Naveen Kumar. I
Music: Vivek – Mervin
Art: C. Udhayakumar
Editor: Sangathamizhan E
Lyrics: Krithika Nelson, Ku.karthik, Prakash Francis
Choreography: Brindha, Leelavathi
Stunt: Murali G
Costume Designer: Anusha G
Stills: Arun Prasath
Pro: Sathishkumar (AIM)
Publicity Designs: Thandora
Sound effects – Vijay rathinam mpse
Sound mixing – Rahamathulla
VFX – HOCUS POCUS VFX PVT, Good Devil Studios, Raymax Studio
DI STUDIO: INFINITY MEDIA
DI COLORIST : MANOJ HEMACHANDAR
(MERGEXR)
விவேக் மெர்வின் இசையில் பின்னணி இசை அடிரடி.. பல சீன்களுக்கு இசை மூலம் உயிரோட்டம் கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் நவீன் குமார் லோக்கல் ட்ரெயின் காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.. அட சென்னையில் இப்படி அழகான ட்ரெயின் இருக்கிறதா? என கேட்க வைக்கிறது..
சண்டைக் காட்சிகளில் ஆக்ஷன் விருந்து சண்டை பயிற்சியாளர் முரளி..
கிளைமாக்ஸ் காட்சியில் கோடிக்கணக்கில் கட்டப்படும் பாலம் மற்றும் அடர்ந்த காடு நதிக்கரை ஓரம் காட்சிகள் ரசிக்கும் ரகம்..
வானம் கொட்டட்டும் என்ற குடும்ப செண்டிமெண்ட் படத்தை இயக்கிய மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளர் தனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார்..
படத்தின் மெயின் கரு கருப்பு பணம் கொள்ளையடிக்கப்பட்டதன் நோக்கம் உள்ளிட்ட காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் திரைக்கதையின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அரசியல் அதிகாரத்தை அடக்க ஹிட்லர் போன்ற ஒருவர் வேண்டும் என இயக்குனர் சொல்ல வருகிறார் என்னவோ??
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஜென்டில்மேன் மற்றும் சிட்டிசன் உள்ளிட்ட படங்களை உங்களுக்கு நினைவு படுத்தினால் நாங்கள் பொறுப்பல்ல..
ஆக ஹிட்லர்.. ஹிட் ஹவர்
Hitler movie review

