HIT 3:The Third Case விமர்சனம்.. 4/5

HIT 3:The Third Case விமர்சனம்.. 4/5

HIT 3:The Third Case விமர்சனம்.. 4/5

 

ஸ்டோரி….

சிறைச்சாலையில் கதை தொடங்குகிறது.. அதன்படி பிளாஷ் பேக் காட்சியில் ஒருவருக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார் நானி.

ஒரே மாதிரியான கொலைகள் அடுத்தடுத்து நடக்க அது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் நாணி.. அப்போது அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைக்க இவரே அங்கு உறுப்பினர் போல கொலையாளிகள் கூட்டத்தில் இணைகிறார்..

அங்கும் பல கொலைகள் வித்தியாசமாக விளையாட்டுக்காக ஆசைக்காக நடக்கும் பட்சத்தில் இவர் அங்கு சென்ற பின் என்ன செய்தார்? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ், சமுத்திரகனி கோமாளி பிரசாத்..

அர்ஜுன் சர்க்கார் என்ற கேரக்டரில் பக்காவாக பொருந்தி இருக்கிறார் நானி.. இவர் போலீஸ் மிடுக்குடன் பெண் பார்க்கும் படலம் சில நேர காட்சி என்றாலும் ரசிக்க வைக்கிறது.. சிகரெட் குடித்து ஸ்டைலாக நடந்து மாஸ் காட்டி இருக்கிறார்.. ஆக்சன் ஒவ்வொன்றும் அசத்தல் ரகம் நானி..

இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் படம் இரண்டாம் பாதியில் முழுக்க ரத்த கறையுடன் திரைகளில் தெரிகிறது.. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மார்க்கோ திரைப்படம் போல இதிலும் ரத்தம் ரத்தம் ரத்தம் என்பதே படம்..

முக்கியமாக ரத்தத்தில் குளியல் போட்டு ஹீரோ வரும் காட்சிகள் நமக்கே கொஞ்சம் பயத்தை உண்டாக்கும்..

நாயகி ஸ்ரீநிதி.. இடைவேளை வரை காதல் நாயகியாக வருகிறார்.. அட இவருக்கு இவ்வளவுதான் காட்சி.? என்று நினைக்கையில் இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷனில் அதிரடி காட்டி இருக்கிறார்.. இரண்டிலும் அழகுதான் ஸ்ரீநிதி செட்டி..

வில்லனாக பிரதீக் பாபர்.. நடிப்பில் சைக்கோ போல மிரட்டி இருக்கிறார்.

சமுத்திரக்கனிக்கு பெரிய வேலை இல்லை..

டெக்னீசியன்ஸ்…

ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவில் காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு அழகு.. அதிலும் கடைசி கிளைமாக்ஸ் முழுக்க ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரத்தம் தெறிக்க நிறைய லைட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது..

பாடல்களை விட பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர்.. அதிலும் நானிக்கு கொடுக்கப்பட்ட தீம் மியூசிக் வேற லெவல்..

இடைவேளைக்கு முன்பு வரும் நானி & ஸ்ரீநிதி டூயட் பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது.. ஆக்சன் படத்தில் ரொமான்ஸ் அழகாக கொடுப்பது ஒரு சில இயக்குனர்களுக்கே கைவந்த கலை..

இயக்குனர் : சைலேஷ் கோலானு

தயாரிப்பு : வால் போஸ்டர் சினிமா மற்றும் யூனானிமஸ் புரொடக்ஷன்ஸ்

தற்போது ஹிட் 3 திரைப்படம் வெளியாகி இருந்தாலும் இதற்கு முன்பு ஹிட் 1 ஹிட் 2 ஆகிய படங்களை எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆக இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருந்தார் டைரக்டர் சைலேஷ் கோலானு..

ஆசைக்காக மனிதர்களைக் கொல்லும் விளையாட்டு ரொம்ப ஓவர்தான்.. இதெல்லாம் எங்கே நடக்கிறது என்ற கேள்வி எழுகிறது.? இது போன்ற சைக்கோவை பார்த்தால் நமக்கே கொலைவெறி வருவது நிச்சயம்..

ஹிட் 4 பட காட்சியின் முன்னோட்டமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.. அதில் நடிகர் கார்த்தி நடிக்கிறார் என்ற சர்ப்ரைஸ் செய்தியும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்கப்பட்டுள்ளது..

எந்த மாநிலத்திற்கு அர்ஜுன் சர்க்கார் (நானி) சென்றாலும் யாரிடமும் அனுமதி கேட்காமல் இவரே போலீஸ் ஆக்ஷன் காட்டுவது எல்லாம் லாஜிக் மீறல்கள்..

பல இடங்களில் வசனங்கள் கவனிக்க வைக்கிறது.. முக்கியமாக ஆண்களின் திருமண வயது 25 – 30 – 35 – 40 என எப்படி ஏறி செல்கிறது என்பதை நானி சொல்லும் போது திருமணமாகாத 40+ ஆண்களுக்கு ஆனந்தம் தான்..?!🤣

சமீபகாலமாக நிறைய தெலுங்கு படங்கள் தமிழ் டப் செய்து வெளியாகி வருகிறது.. இவை அனைத்தும் தெலுங்கு இயக்குனர்கள் மேல் நமக்கு பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.. அந்த வரிசையில் ஹிட் 3 படமும் ரசிகர்களுக்கு பிடித்த ஆக்சன் படமாக இருக்கும்.. உறுதியாக சொல்லலாம்

Hit 3 The Third Case movie review