Habeebi ஹபீபி விமர்சனம்.. 4.25/5.. இதயங்கள் நிறைந்த இதமான இஸ்லாம்.
Habeebi ஹபீபி விமர்சனம்.. 4.25/5.. இதயங்கள் நிறைந்த இதமான இஸ்லாம்.
ஸ்டோரி…
தென்காசி பகுதியில் 1980 கால கட்டங்களில் முஸ்லிம் குடும்பங்களுக்கு இடையே நடந்த சுவாரசியமான காதல் மற்றும் மோதல் சம்பவங்களே ஹபீபி..
கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா.. ஈஷாவுக்கு நாயகி மாளவிகா மீது காதல்.. பல கட்டுப்பாடுகளுக்கு இடையே இருப்பதால் மாளவிகா தன் காதலை சொல்ல தயங்குகிறாள்.. ஒரு கட்டத்தில் காதலிக்காக சுவர் ஏறி குதித்து அவள் வீட்டிற்கு செல்லும் போது கையும் களவுமாக ஈஷா பிடிபட ஊர் பிரச்சனையாகிறது..
என்னதான் இருவரும் முஸ்லிம் மதமாக இருந்தாலும் இருவரும் வேறு சாதி என்பதால் மோதல் வெடிக்கிறது..
அதன் பிறகு நடந்தது என்ன.? ஈஷா மாளவிகாவை கரம் பிடித்தாரா.? இருவரில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன.? என்பதுதான் இந்த ஹபீபி-யின் சுவாரசியமான திரைக்கதை
கேரக்டர்ஸ்…
Kasthoori Raja – Mohamed Yousuf
Esha – Syed Abuthahir
Malavika Monoj – Nilofar Nisha
Dhanasree – Kathija Parvin
Anusreya Rajan – Saliha Beevi
Jayasree Binuraj – Mammathu
Arul Kumar – Sheik Uthuman
Rekha Kumanan – Rabiya
Ismath Banu – Byroja
Malar Kaizen – Nilofar Mother
Sun Shahul – Parvin’s Father
Master Theehan – Child Abuthahir
Dheeksha Sree – Child Nilofar

ஒரு இஸ்லாமிற்கு உரிய உடல் மொழியை அழகாக கொடுத்திருக்கிறார் நாயகன் ஈஷா முகமது.. இவரும் ஒரு இஸ்லாமியர் என்பதால் தன்னை அதில் பொருத்திப் பார்த்திருக்கிறார்.. இவரே முதல் படம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை..
15 வயது முதல் 40 வயது வரை கால கட்டங்களை தன் உடல் மொழியில் கொடுத்திருக்கிறார். ஒரு காட்சியில் காதலிக்காக சவுக்கடி வாங்கும் போது வேதனையில் கூட உடல் மொழியை உயிர்பிக்க செய்து இருக்கிறார்..
அரும்பு மீசை முளைத்த பருவம் முதல் நரைத்த தாடி வரை மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஈஷா..
நிலோபர் நிஷா கேரக்டரில் மாளவிகா. ஒரு முஸ்லிம் பெண்ணுக்கே உரித்தான நாணம் என அனைத்தையும் உடல் மொழியில் கொடுத்து இருக்கிறார்.. படத்தில் இவர் பத்து வார்த்தைகள் கூட பேசியிருக்க மாட்டார்… ஆனால் அனைத்தையும் தன் அசைவில் உணரச் செய்திருக்கிறார்..
பைரோஜா பர்வீன் உள்ளிட்ட கேரக்டரில் நடித்தவர்களும் நம் மனங்களில் நிறைந்து இருக்கின்றனர்..
இஸ்லாமியராக கஸ்தூரிராஜா கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.. தன் தம்பி வெளிநாடு செல்வது முதல் தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முற்படும் வரை என ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இயல்பான அண்ணனாக தந்தையாக யூசுப் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்..
இத்துடன் கஸ்தூரி ராஜாவின் தம்பி அவரது மனைவி.. இருவரும் அசத்தல் நடிப்பு.. சாச்சா சாச்சி கேரக்டரில் இருவரும் சபாஷ் பெறுகிறார்கள்.. நான்கு சுவர்களுக்கு வாழும் இஸ்லாமிய பெண்ணை சாச்சி கேரக்டரில் செதுக்கியிருக்கிறார்..
கஸ்தூரி ராஜாவின் இந்து மத நண்பராக வருபவரும் அழும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைத்து விட்டார்.. இப்படியாக ஒவ்வொரு கேரக்டர்களும் நம் மனதில் நிறைந்து இருக்கின்றனர்…

டெக்னீசியன்ஸ்…
Director – Meera Kathiravan
Writer – V.S.Mohamed Ameen
Music Director – Sam Cs
Cinematographer – Mahesh Muthuswami
Editor – Mathi Vs
Art Director – Appunni Sajan – கலை இயக்குனர் பணி பாராட்டுக்குரியது 1980 – 1990 – 2020 உள்ளிட்ட காலகட்டங்களில் இஸ்லாமியர்களின் அலங்காரம் ஆடை பொருள்கள் என அனைத்தையும் தத்ரூபமாக கொடுத்திருக்கிறார்…
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய மதி என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.. தென்காசியில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதி அவர்கள் பேசும் மொழி என அனைத்தையும் ஒரு யதார்த்த காவியமாக இயக்குனர் கொடுக்க இவர்களின் பங்கு பாராட்டுக்குரியது..
சாம். சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களும் பாடல் வரிகள் அருமை.. அவரது இசையில் உருவான ஏதோ ஏதோ பேச தோணுதே… பாட்டு மற்றும் நீயும் நானும் தோல் பொம்மை தானோ… இரண்டு பாடல்களும் அருமை.. அதுபோல பின்னணி இசையிலும் நம்மை உணர்வுபூர்வமாக கவர்ந்திருக்கிறார்…
அவள் பெயர் தமிழரசி & விழித்திரு உள்ளிட்ட படங்களை இயக்கிய மீரா கதிரவனின் மூன்றாவது படைப்பு இது.. ஒரு இஸ்லாமியரின் வாழ்வியலை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்..
ஒருவர் அடுத்த இஸ்லாமியரிடம் பேசும் போது அவர்கள் ஒவ்வொரு வார்த்தைகளின் நடுவில் இஸ்லாமிய சொற்களை உதிப்பதும் அதன் மூலம் அவர்களின் மத ஒற்றுமை மத நல்லிணக்கத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்…
தமிழ் சினிமாவில் பல ஹிந்து முஸ்லிம் திரைப்படங்களை பார்த்திருப்போம்.. ஆனால் இந்த ஹபிபி முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் சுவாரசியமான சிந்தனைகள் அவர்களின் வாழ்வியல் என ஒவ்வொன்றையும் பிரேம் பை பிரேமாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்..
கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை அறியாமல் கண் கலங்கவும் செய்திருக்கிறார்.. ரசிகரின் பார்வையில் காதலர்கள் முடிவு எப்படியோ என நம் பக்கம் திருப்பி விட்டுள்ளார்.. ஆக இந்த ஹபீபி ஹாப்பி தான்..
Producers :
Nesam Entertainment
Shahul Hameed
Kovai Ibrahim
Habeebi movie review

