‘என் காட்டுல மழை…; ’பாக்கெட் நாவலில் இளையராஜா இடத்தில் ஜிவி பிரகாஷ்
‘என் காட்டுல மழை…; ’பாக்கெட் நாவலில் இளையராஜா இடத்தில் ஜிவி பிரகாஷ்
சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள படம் ‘பாக்கெட் நாவல்’.
இதில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். காந்தார புகழ் கன்னடத் திரையுலகின் நடிகர் ராஜ் பி ஷெட்டி தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்..
முதலில் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் இயக்குநர் தியாகராஜன் – இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளையராஜா விலகி இருப்பதாக கூறப்பட்டது..
இந்த நிலையில் தான் தற்போது இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இனி வதந்திகளுக்கு வேலை இல்லை. இது அதிகாரபூர்வமானது என்ற வாசகங்களுடன், ‘என் காட்டுல மழை வருது…’ என்ற பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் ஆடுவது போன்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
Gv Prakash compose music for Pocket Novel

