GUTS கட்ஸ் திரை விமர்சனம்

GUTS கட்ஸ் திரை விமர்சனம்

GUTS கட்ஸ் திரை விமர்சனம்

 

 

ஸ்டோரி…

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர் நாயகன் ரங்கராஜ்.. யாரோ ஒரு சிலர் இவரின் பெற்றோரை கொன்று விடுகின்றனர்.. ஒரு கட்டத்தில் இவரது மனைவியும் கொல்லப்படுகிறார்..

தொடர்ச்சியாக இவரது உறவினர்களை கொல்லும் நபரின் நோக்கம் என்ன.? அவர்கள் யார்.? என்பதை தன்னுடைய போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கிறார் நாயகன் ரங்கராஜ்..

நடிகர்கள்…

RANGARAJ – RANGARAJ & PETHANASAMY
SHRUTHI NARAYANAN – GANAVATHIYAMMAL
NANCY – ANU
DELHI GANESH – KAREEM BAAI
SAI DHEENA – PANDIAN
BIRLA BOSE – THOMAS
SRILEKHA MAM – PETHANASAMY AMMA
ARANTHANGI NISHA – MAHALAKSHMI

ஹீரோவும் நானே டைரக்டர் நானே என ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்து இருக்கிறார் நாயகன் ரங்கராஜ்.. அதில் ஓரளவுக்கு பயணமும் செய்திருக்கிறார்.. தந்தையாக முறுக்கு மீசையில் கம்பீரம் காட்டி மாஸ் செய்துள்ளார்..

சமீபத்தில் சினிமா வாய்ப்புக்காக சர்ச்சையான ஸ்ருதி நாராயணன் இதில் நாயகி ஆகியிருக்கிறார்.. நடிப்பில் குறையில்லை.. இவருடன் நான்சி என்ற மற்றொரு நாயகியும் உண்டு..

அப்பா ரங்கராஜுக்கு ஸ்ருதியும், போலீஸ் ரங்கராஜுக்கு ஜோடியாக நான்சியும் நடித்துள்ளனர்..

இவர்களுடன் சாய் தீனா, பிர்லா போஸ் ஶ்ரீ லேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

MUSIC: JOSE FRANKLIN
DOP: MANOJ
EDITOR: RANJITH
STUNT: “ACTION” PRAKASH
PRO: NIKIL MURUKAN

ஜோசப் ப்ராங்க்ளின் இசை, மனோஜ் ஒளிப்பதிவு ஆகியோர் கட்ஸ்க்கு பெரிய பலம் கொடுத்துள்ளனர்..

ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.

க்ரைம் திரில்லர் கதைகளுக்கு எப்போதும் கூடுதல் விறுவிறுப்பு தேவை.. அப்பொழுது தான் ரசிகர்கள் செல்போனை மறந்து திரை காட்சிகளை ரசிப்பார்கள்.. இதில் சுவாரசியம் குறைவு..

WRITTEN & DIRECTED: RANGARAJ

PRODUCER: JAYABHARATHI RANGARAJ

ஹீரோ டைரக்டர் என இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் ரங்கராஜ் எடுத்திருப்பதால் என்னவோ அவருடைய பணிச்சுமை காட்சிகளில் தடுமாற்றத்தை தருகிறது..

Guts movie review