கெவி விமர்சனம்.. அப்பாவி மக்களின் அவலக்குரல் ஒலி

கெவி விமர்சனம்.. அப்பாவி மக்களின் அவலக்குரல் ஒலி

கெவி விமர்சனம்.. அப்பாவி மக்களின் அவலக்குரல் ஒலி

 

ஸ்டோரி…

நம் சுதந்திர இந்தியாவில் இன்றளவும் மின்சாரம், சாலை, மருத்துவ வசதிகள் இல்லாத எண்ணற்ற கிராமங்கள் இருக்கிறது என்பதற்கு ‘கெவி’ படம் ஒரு சான்று..

கொடைக்கானல் அருகே உள்ள மலைவாழ் பகுதியில் தன் கணவர் ஆதவனுடன் வசித்து வருகிறார் நாயகி ஷீலா.. ஒருநாள் இரவில் பிரசவ வலி ஏற்படும் போது எந்த வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் இவரை கிராமத்து மக்கள் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு செல்கின்றனர்..

அப்போது எதிரி ஆட்கள் இவரது கணவரை கொல்ல திட்டமிடுகின்றனர்.. இந்த சூழ்நிலையில் அவர்களை மீறி மருத்துவமனைக்கு சென்றார்களா..? நல்லபடியாக குழந்தை பிறந்தது.? கிராமத்து மக்கள் என்ன செய்தனர்.? என்பதை வலியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன்..

கேரக்டர்ஸ்…

ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத் மற்றும் பலர்

ஒரு நிஜ கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் நாயகி ஷீலா ராஜ்குமார்.. இவரது பிரசவ வலி ஓசை நாம் தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் செவிகளில் ஒலிக்கும்..

மனைவி ஷீலாவை வலியை கண்டு கதறும் கணவர் ஆதவனின் நடிப்பும் அபாரம்.. தன் கிராமத்திற்கு எல்லா வசதிகளும் வேண்டும் என எம்எல்ஏவிடும் சண்டை போடும் போது கிராமத்துக் காளையாக துள்ளி இருக்கிறார்..

கிராமத்து மக்களாக நடித்தவர்களின் நடிப்பும் யதார்த்த பதிவு.. கெட்ட போலீசாக சார்லஸ் வினோத் மிரட்டி இருக்கிறார்..

அலட்சிய டாக்டராக காயத்ரி, பயிற்சி டாக்டராக விஜய் டிவி ஜாக்குலின், ஜீவா சுப்ரமணியம் ஆகியோரின் நடிப்பும் பலம்..

டெக்னீசியன்ஸ்…

இசை : பாலசுப்பிரமணியன் ஜி & சா.ராஜாரவிவர்மா

பின்னணி இசை உயிரோட்டம் கொடுத்திருக்கிறது.. வைரமுத்து வரிகளில் தேவா குரலில் வரும் ‘மாமலை பாட்டு…’ முனுமுனுக்க வைக்கும்..

ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா..

இந்த இடத்தில் கூட படப்பிடிப்பு நடத்தப்படுமா? என்ற பல கேள்விகளை எழுப்பும் வகையில் ஒலிப்பதிவாளர் தன் திறமையை காட்டி இருக்கிறார்..

பல தொழில்நுட்பங்கள் ஹைடெக் டெக்னாலஜி வந்து விட்ட காலத்திலும் இன்றும் இன்னல்களை அனுபவிக்கும் எளிய மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன்..

மலைவாழ் மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள்.. அரசு அதிகாரிகளின் அராஜக முறையை கெத்தாக பதிவு செய்திருக்கிறார் கெவி இயக்குனர் தமிழ் தயாளன்.

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த மக்கள் இந்திய மக்களாக ஓட்டு போடும் குடிமக்களாக அரசியல்வாதிகளுக்கு தென்படுகிறார்கள் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார் டைரக்டர் தமிழ் தயாளன்.

Gevi movie review