GDN விமர்சனம் – GD Naidu – 4.25/5… கெத்து காட்டிய கொங்கு தமிழன்
GDN விமர்சனம் – GD Naidu – 4.25/5… கெத்து காட்டிய கொங்கு தமிழன்
கொங்கு மண்ணின் மைந்தரும், இந்தியாவின் எடிசன் எனப் புகழப்படும் விஞ்ஞானியுமான ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக அமைந்துள்ளது…
கொங்கு மண்ணில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், ஆட்டோமொபைல், விவசாயம் மற்றும் தொழில்புரட்சியில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தளராத முயற்சி ஆகியவை இன்றையை இளைஞர்கள் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம்.
ஸ்டோரி…
நம்மில் பல பேருக்கு இவரை தெரிந்து இருக்கும்.. ஜி டி நாயுடு.. சுருக்கமாக ஜி டி என்.. இவரை நம் பள்ளி பாட புத்தகத்தில் படித்திருப்போம்.. சில படங்களில் கவுண்டமணி கூட காமெடி செய்திருப்பார்.. நீ என்ன பெரிய ஜி டி நாயுடுவா என்று கேட்பார்.. ஆக ஜிடி நாயுடு என்பவர் ஒரு கண்டுபிடிப்பாளர்.. தொழில் புரட்சியாளர்..
கோவை மாவட்டத்தில் பிறந்த இவர் பள்ளிக்கூட படிப்பை கூட தாண்டாதவர்.. ஆனால் தன் நுண்ணறிவு மூலம் மக்களுக்கு தேவையான பல்வேறு தயாரிப்புகளை கண்டுபிடித்தவர்.. அதனை தானே இந்தியாவில் உருவாக்கியவர்..
உதிரி பாங்குகள் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பருத்தியிலும் விவசாய புரட்சி செய்தவர்.. தமிழகம் முழுவதும் இவரது பேருந்துகள் அரசுக்கு சவால் விடு வகையில் அமைந்திருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல…
முக்கியமாக ஜெர்மனி நாட்டில் உள்ள பென்ஸ் கார் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களை தமிழகத்தில் உருவாக்கியவர்.. இதனால் பல நாடுகள் இவரது கண்டுபிடிப்பை கண்டு அசந்து இருக்கின்றன.. இப்படியான இவரது வாழ்க்கையில் இந்திய அரசாங்கமே இவருக்கு பல்வேறு இடஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.?
சுதந்திர காலத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக் கொண்டு சில இந்திய அரசு அதிகாரிகள் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தடைகளை அவர் எப்படி உடைத்தெறிந்து மாமனிதர் ஆனார் புரட்சியாளரானார் என்பதுதான் இந்த படத்தின் திரை வடிவம்..
ஆனால் ஒரு சில காரணங்களால் தமிழக மட்டுமே இவரது வாழ்க்கையை அறிந்திருந்தது… அதை ஒரு முயற்சியாக இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் நிரூபிக்க இந்த திரை வடிவத்தை கொண்டு வந்திருக்கின்றனர் மாதவன் மற்றும் படக்குழுவினர்..

கேரக்டர்ஸ்…
R. Madhavan
Priyamani
Jayaram
Dushara Vijayan
Sathyaraj
Vinay Rai
Aditi Balan
Karunakaran
Mohan Raman
Thambi Ramaiah
Tejeenthan Arunasalam
Brigida Saga
Sheela Rajkumar
Shilpa Sreekumar
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ராக்கெட் நம்பியாக அவரது வாழ்க்கை படத்தில் நடித்திருந்தவர் மாதவன்.. அதன் தாக்கமோ என்னவோ இந்த முறையும் ஜிடி நாயுடுவாக வாழ்ந்திருக்கிறார் மாதவன்..
எந்தத் தொழில் முடங்கினாலும் அடுத்தடுத்து அவரது முயற்சிகள் அவரை எப்படி ஒரு ரோல் மாடலாக உருவாக்கியது.. என்பதை ஒரு உணர்வுபூர்வமாக அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார் மாதவன்..
முதல் மனைவி ஷீலா.. இரண்டாவது மனைவி துஷாரா.. தான் என்ற ஆணவம் இல்லாவிட்டாலும் தன் உழைப்பில் மிகுந்த கௌரவம் கொண்டவர்.. தன்மானம் கொண்டவர் ஜி டி நாயுடு.. இதனால் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கிறார்.. அதனைக் கூட எளிய மக்களுக்கு புரியும் வகையில் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர்..
ஜிடி நாயுடுவின் இளமைக்கால நபராக டிஜே அருணாச்சலம் நடித்திருக்கிறார்.. அவரும் அந்த கேரக்டருக்கு பக்கபலமாக உடல் மொழியாலும் உணர்வாலும் உயிர் கொடுத்திருக்கிறார்.. புல்லட் ஓட்ட தெரிஞ்சா மட்டும் பத்தாது.. அது எப்படி ஓடுதுன்னு தெரிஞ்சுக்கணும் என்று அவர் சொல்லும்போதே ஜிடி நாயுடுவின் அறிவியல் ஆர்வம் புரிகிறது..
மாதவனுக்கு நிகராக சத்யராஜ் மற்றும் ஜெயராம்.. அனுபவ நடிப்பில் இருவரும் கலக்கியிருக்கின்றனர்.. அதிலும் சத்யராஜுக்கு கொங்கு தமிழ் பாசை எழுதி என்பதால் அவரும் அவர் பங்குக்கு வெளுத்துக்கட்டு இருக்கிறார்..
1960 படங்களில் பார்த்த ஒரு கேரக்டர் போலவே ஜெயராம் தன் கேரக்டரில் ஜெயம் பெற்றிருக்கிறார்.. மண்ணின் மைந்தனுக்கு உறுதுணையாக இல்லாமல் ஆங்கிலேயருடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்யும் வில்லத்தனம் கூட ரசிக்க வைக்கிறது.. ஒரு கட்டத்தில் கருணாகரனை எதிர்த்து இவர் செய்யும் செய்கை கூட கைத்தட்டலை பெற வைக்கிறது.. அந்த ஒரு பார்வையே பல வார்த்தைகளை சொல்லும்..
இவர்களுடன் பிரியாமணி, துஷாரா விஜயன், ஷீலா, பிரிகிடா, வினய், அதிதி பாலன், கருணாகரன் உள்ளிட்ட பல கேரக்டர்களும் உறுதுணை..

டெக்னீசியன்ஸ்…
Director: Krishnakumar Ramakumar
Writers: Krishnakumar Ramakumar, R. Madhavan
Producers: R. Madhavan, Sarita Madhavan, Varghese Moolan, Vijay Moolan
Music Composer: Govind Vasantha
Cinematography: Aravind Kamalanathan
Editors: Bijith Bala, K. Sasi Kumar
Production Designer: Cyril Kuruvilla
Costume Designer: Jishad Shamsudeen
கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரின் பணியும் மிக சிறப்பானது.. அவர்கள் இந்த படத்தை 1930 – 50 கால கட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர்..
96 படத்தில் மெலோடி இசையால் நம் மனங்களை வருடிய கோவிந்து வசந்தா இந்த படத்தில் அதிரடி பின்னணி இசை கொடுத்து அடடா இவரா என ஆச்சரியப்பட வைக்கிறார்.. இனி மாஸ் படங்களுக்கு இவருக்கு வாய்ப்பு கொடுங்க ஐயா என்று சொல்லும் அளவுக்கு பின்னணி செயல் பின்னி எடுத்து இருக்கிறார்..
கிருஷ்ணகுமார் ராம்குமார்.. பல படங்களில் இவரை சின்ன கேரக்டரில் பார்த்திருப்போம்.. இந்த முறை இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.. அந்தக் கால நடிகர் என் எஸ் கே போல ஒரு கேரக்டரில் வந்து செல்கிறார்.. இவருடன் ஜான் விஜய்யையும் எம்ஆர் ராதா கேரக்டரில் வந்து செல்கிறார்..

பெரும்பாலும் இதுபோன்ற திரை காவியங்கள் வாழ்க்கை படங்கள் ஒரு டாக்குமென்ட்ரி படம் போலவே படமாக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க கமர்சியல் கலந்து எல்லா வயதினரும் ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் கிருஷ்ணகுமார்..
முக்கியமாக பல மாஸ் காட்சிகளை கொடுத்து நம்மை சீட்டு நுனிகள் உட்கார வைக்கிறார்.. இடைவேளை வரை படம் போவதே தெரியவில்லை இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் காட்சிகள் எமோஷனலாக இருந்தாலும் அதுவும் கதைக்கு தேவையானவையே…
திறமை எங்கிருந்தாலும் அதனை தேடி அதற்கு மதிப்பு கொடுக்கும் ஜிடி நாயுடு உண்மையாகவே சிறந்த மனிதர் தான்.. அந்தக் காலத்திலேயே கோடி கோடியாக சம்பாதித்தாலும் முறையாக தொழில்வரி செலுத்தி அதற்கு எல்லா ஆவணங்களையும் சரியாக வைத்திருக்கும் ஒரு தொழிலதிபராகவே ஜீடி நாயுடு வாழ்ந்திருக்கிறார்.. ஆனாலும் ஆங்கிலேய அரசுக்கு அடிபணியாமல் கெத்து காட்டும் கொங்கு தமிழராக மாஸ் காட்டியிருக்கிறார்..
வெறும் ஏட்டில் மட்டுமே இருந்த ஜிடி நாயுடுவின் வாழ்க்கை இப்போது ஒரு திரைப்படமாக வந்துள்ளது.. அந்த மாமனிதருக்கு நாம் நன்றி செலுத்தும் வகையில் இந்த படத்தை திரையில் பார்த்து குழந்தைகளுக்கு அந்த வரலாறை காட்டி நாமும் மகிழ்வோமாக…!!
GDN Review G D Naidu movie review

