காந்தி கண்ணாடி விமர்சனம்… காந்திக்கு கல்யாணம்

காந்தி கண்ணாடி விமர்சனம்… காந்திக்கு கல்யாணம்

காந்தி கண்ணாடி விமர்சனம்… காந்திக்கு கல்யாணம்

 

ஸ்டோரி…

ஈவண்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்துகிறார் நாயகன் KPY பாலா.. இவருக்கு காதலி நமீதா மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் பாலாஜீ சக்திவேல் தனக்கு 60ம் கல்யாணம் நடத்தி வைக்க இந்த நிறுவனத்தை நாடுகிறார்.

பாலாஜி சொல்ல சொல்ல பட்ஜெட் போடவே கிட்டத்தட்ட ₹ 52 லட்சத்தை நெருங்குகிறது அந்த திருமண வைபவ நிகழ்ச்சி.. பாலாஜியிடம் அவ்வளவு பணம் இருக்குமா என்ற கேள்வி எழும் நிலையில் சொந்த ஊரில் தான் ஒரு ஜமீன் என்றும் சொந்த நிலத்தை விற்று வருவதாகவும் சொல்லி கிட்டத்தட்ட கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 80 லட்சத்திற்கு விற்று கருப்புப் பணமாக பெற்று திரும்புகிறார்..

 

அப்போது திடீரென மத்திய அரசு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வருகிறது.. இதனால் ₹ 80 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.. ஒரு பக்கம் அந்த பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.. இன்னொரு பக்கம் பல லட்சங்கள் கமிஷன் கேட்கின்றனர்..

அதன் பிறகு என்ன நடந்தது.? ஆசைப்பட்டபடி தன் மனைவியுடன் 60ம் கல்யாணத்தை செய்து கொண்டாரா பாலாஜி சக்திவேல்.? பாலா உதவினாரா..? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

Bala as Kathir
Balaji Sakthivel as Gandhi
Urvashi Archana as Kannamma
Namita Krishnamurthy as Geetha
Madhan as Madhan
Amudhavanan as Sundharam
Nikhila as Kalai

விஜய் டிவி-யில் காமெடியில் கலக்கி கொண்டிருந்த பாலா இதில் நாயகனாக அறிமுகம்.. நாயகனுக்காக தன் உடல் மொழியில் உடலில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்.. ஆனால் வழக்கம் போல டிவியில் கவுண்டர் கொடுப்பது போல ஸ்பீடாக பேசி இருக்கிறார்..

முக்கியமாக எமோஷன் காட்சிகளை முகத்தை மூடி மறைத்திருக்கிறார்.. அதிலும் அர்ச்சனா பேசும் ஒரு நீண்ட வசன காட்சியில் ஒரு பிட்டு அளவுக்கு கூட பாலாவின் முகம் காட்டப்படவில்லை.. அது ஏனோ.?

நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி.. கொடுத்த பாத்திரத்தில் முடிந்தவரை ஸ்கோர் செய்து இருக்கிறார..

பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் கவர்கின்றனர்.. ஆனால் இவர்களுக்காகவே கதை எழுதப்பட்டதால் பாலாவின் கேரக்டர் வலுவில்லை..

இளம் வயது பாலாஜி மற்றும் அர்ச்சனா நடித்த இருவரும் சிறப்பு.. இவர்களின் காட்சி நீளமாக இருந்திருந்தால் இவர்களின் காதல் படத்திற்கு ஆணிவேராக அமைந்திருக்கும்..

விஜய் டிவி அமுதவானன் இருந்தும் காமெடிக்கு பஞ்சமே..

டெக்னீசியன்ஸ்…

Producer – Jayikiran
Director – Sherief
DOP – Balaji K Raja
Editor – T. Shivanandeeswaran
Music Director – Vivek & Mervin
Art director – Manimozhian Ramadurai
Lyrics – Sherief,. Uma devi, Ku Karthick
Choreography – Abu & Chals
Costume Designer – Priya Harie & Priya Karan
PRO – Rekha

விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர்.. பாடல்களும் பாடல் வரிகளும் கவனம் பெறுகிறது.. பாலாஜி கே ராஜ ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. நகரத்துக் காட்சிகளை விட கிராமத்துக் காட்சிகளில் ஒளிப்பதிவு அருமை..

ஷெரிப் என்பவர் இயக்கியிருக்கிறார்.. காந்தி கண்ணாடி என்று படத்திற்கு தலைப்பு வைத்து திரைக்கதை அமைத்திருந்தாலும் படம் முழுவதும் காந்திக்கு கல்யாணம் என்பதை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது… காந்தி கல்யாணம் என டைட்டில் வைத்திருக்கலாம் போல..

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையப்படுத்தி கதை அமைத்து இருப்பதால் இதில் இத்தனை போராட்டமா.? என்ற கேள்வி எழுகிறது.. KPY பாலாவை ஹீரோவாக்கி இருப்பதால் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி நிறைய வேலை வாங்கி இருக்கலாம்..

 

Gandhi Kannadi movie review