FRIDAY விமர்சனம் 3.5/5… இந்த FRIDAY நிச்சயம் உங்க WEEK END FRIDAY க்கு ஏற்ற படம்
FRIDAY விமர்சனம் 3.5/5… இந்த FRIDAY நிச்சயம் உங்க WEEK END FRIDAY க்கு ஏற்ற படம்
ஸ்டோரி…
மைம்கோபி ஒரு அரசியல்வாதி மட்டுமில்லாமல் ஒரு கொலைகார கும்பல் தலைவன்.. தன்னை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவரை போட்டு தள்ள வேண்டும் என்பது இவரது எண்ணம். இவருக்கு பக்கபலமாக இருக்கிறார் நாயகன் அனீஸ் மாசிலாமணி..
ஒரு கட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்காக தன் தம்பியை நல்ல விதமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்த அடி தடியை வெறுக்கிறார் அனீஸ்..
இதனால் இவருக்கும் மைம் கோபிக்கும் இடையே பிரச்சனை வருகிறது.. இந்த சூழ்நிலையில் தன் தாய் தந்தையரை கொலை செய்த கும்பலை தேடும் KPY தீனா இந்த கும்பலுடன் இணைகிறார்..
இறுதியில் என்ன ஆனது.? இவர்களிடம் திட்டம் பலித்ததா.? உண்மையான கொலைக்காரன் யார்.? கொலைக்கான காரணம் என்ன..? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
கைதி உள்ளிட்ட படங்களில் சின்ன கேரக்டரில் வந்த தீனா இந்த படத்தில் கதை நாயகனாகவே தன்னை பொருத்திப் பார்த்திருக்கிறார்.. நடிப்பிலும் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது..
அரசியல்வாதி & கும்பல் தலைவன் என வழக்கமான பாணியில் ஜொலிக்கிறார் மைம் கோபி..
இவர்களுடன் நாயகி சித்து குமரேசன்.. தன் பங்குக்கு ஸ்கோர் செய்து இருக்கிறார்.. . ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன் உள்ளிட்டோரும் யாருப்பா இவர்கள்.? என்று கவனிக்க வைக்கிறார்கள்..

டெக்னீசியன்ஸ்…
படத்தில் பெரும்பாலும் இசை காட்சிகள் லைவில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.. எனவே நமக்கு நெருக்கமான கதையுடன் ஒன்ற முடிகிறது.. இசையமைப்பாளர் பெயர் டுமே.. வித்தியாசமான பெயர் போலவே வித்தியாசமான இசையை கொடுத்து இருக்கிறார்.
ஆனால் கொஞ்சம் சவுண்ட் எபெக்ட் கொடுத்து கமர்சியல் கலந்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்பது நமது எதிர்பார்ப்பு..
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ்.. பெரும்பாலும் இரவு நேர காட்சிகளை அதே ஒளி தன்மையுடன் கொடுத்திருப்பது சிறப்பு..
அணிஸ் மாசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த FRIDAY திரைப்படம்.. ஒரு வெள்ளிக்கிழமை இரவுகள் நடக்கும் கதையை மையப்படுத்தி இருப்பதால் இதற்கு இந்த பெயர் என்று இயக்குனர் சொன்ன காரணம்..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் இந்த FRIDAY படம் நிச்சயம் உங்க WEEK END FRIDAY க்கு ஏற்ற படம்தான்..
கத்தி-யை எடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற சாதாரண ஒன்லைன் கதை தான்.. ஆனால் அதை சொன்ன விதத்தில் இயக்குனர் ஜெயித்துவிட்டார்.. சாதாரணமாக நகரும் கதையில் நிறைய நிறைய ட்விஸ்ட் இணைத்து கிளைமாக்ஸ் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.. ஒவ்வொரு நடிகர்களும் அந்தந்த கேரக்டர்களாகவே உணர்ந்து நடித்திருக்கிறார்கள்..
Friday movie review

