என் காதலே விமர்சனம்.. ட்ரை ஆங்கில(ள்) லவ்

என் காதலே விமர்சனம்.. ட்ரை ஆங்கில(ள்) லவ்

 

என் காதலே விமர்சனம்.. ட்ரை ஆங்கில(ள்) லவ்

 

 

Sky wanders எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து இயக்கிய ‘என் காதலே..’ என்ற படத்தை துரைசாமி  வெளியிடுகிறார்..

 

ஸ்டோரி…

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டு கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வெளிநாட்டில் இருந்து வருகிறார் நாயகி லியா.. அங்கு டூரிஸ்ட் கைடாக பணிபுரியும் லிங்கேசன் நற்குணங்களை பார்த்து ஒரு கட்டத்தில் காதல் கொள்கிறார்..

இருவரும் நெருக்கமாக பழகி காதலித்துக் கொண்டிருக்கும் போது லிங்கேஷின் காதல் விவகாரம் அவரது உள்ளூர் காதலி திவ்யாவிற்கு தெரிய வருகிறது..

இதனை எடுத்து இந்த முக்கோண காதல் கதை என்ன ஆனது.? யாரை கரம் பிடித்தார்.? யாரை மணந்து கொண்டார் ஹீரோ என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
லிங்கேஷ் –   தீனா

லியா (லண்டன்)  – ஹேலன்

திவ்யா  – தனம்

காட்பாடி ராஜன்  – வெள்ளை ராஜன்

கஞ்சா கருப்பு – சிட்டுக்குருவி

மாறன்  – மாறன்

மதுசூதன் – மதுசூதன்

மீனவ சமுதாய நாயகன் நவீன கலாச்சாரத்திற்கு மாறி ஆங்கிலத்தில் கலக்கும் காட்சிகளில் லிங்கேஷ் அந்த கேரக்டருக்கு கரெக்டாக லிங்க் ஆகியிருக்கிறார்..

தன் காதல் நாயகன் தனக்கு கிடைக்க மாட்டாரோ என்ற பரிதவிப்பில் திவ்யா உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

லண்டன் நாயகி லியா தன் கேரக்டரில் குறையில்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். காதலுக்காக ஏங்கும் காட்சிகளில் இவரும் ஸ்கோர் செய்கிறார்..

மாறன் மட்டும் கஞ்சா கருப்பு இருவரும் கொஞ்சம் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்.. அதை வேளையில் கொஞ்சம் மிரட்டலுக்கு மதுசுதன் மற்றும் காட்பாடி ராஜன் இருவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்..

 

தொழில் நுட்ப கலைஞர்கள்  :

எழுத்து இயக்கம் தயாரிப்பு  திருமதி ஜெயலட்சுமி  அவர்கள் ‘ஸ்கை வாண்டர்ஸ்’ எண்டர்டைன்மெண்ட் நிறுவனம்..

இசை  – சாண்டி சாண்டல்லோ

பாடல் வரிகள் – கபிலன், சந்துரு, ஜெயலட்சுமி

ஒருமுறை உன் மடியில்… என்னானதோ ஏதானதோ என்ற வரிகளும் ரசிக்க வைக்கின்றன..

ஒளிப்பதிவு – டோனிசென் & வெங்கடேஷ்

எடிட்டர் – கோபி கிருஷ்ணா – ரஞ்சித்.. ஆனால் நீளமான காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாம்..

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது..

நடனம் – பாப்பி

கலை   –   சசிகுமார்

ஸ்டண்ட் – வீர் விஜய்

PRO – வேலு. S

பெரும்பாலும் இது போன்ற முக்கோண காதல் கதைகளை நாம் நிறைய பார்த்திருந்தாலும் உள்ளூர் காதலியா? அல்லது வெளிநாட்டு காதலியா.?

வெளிநாட்டு நவீன மோகத்திற்கு ஆசைப்பட்டாரா.? அல்லது மண் சார்ந்த காதலுக்கு ஆசைப்பட்டாரா? நாயகன் என்பதை வித்தியாசமாக உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இந்த 62 வயது பெண் இயக்குனர் ஜெயலட்சுமி..

மீனவ கலாச்சாரம்.. இரு தரப்பு மோதல்.. பொறாமை சூழ்ச்சி குடும்ப செண்டிமெண்ட் இத்துடன் தமிழர்களின் பெருமை பேசும் கலாச்சார பண்பாடு உள்ளிட்டவை கலந்து ஒரு கமர்சியலாக ‘என் காதலே’ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆக என் காதலே.. ட்ரை ஆங்கில(ள்) லவ்

En Kadhalae movie review