EMI மாத தவணை விமர்சனம்
EMI மாத தவணை விமர்சனம்
ஸ்டோரி…
EMI மாதத்தவனை இந்த படத்தின் தலைப்பே கதையை சொல்லும்.. நாயகன் சதாசிவம் காதலிக்கும் போது பைக்கை லோன் எடுத்து வாங்குகிறார்.. அதுபோல காதலித்த பெண்ணை திருமணம் செய்த பின் மனைவிக்கு பரிசளிக்க கார் லோன் எடுக்கிறார்..
இதற்காக இவரது நண்பர்கள் இவருக்கு SUREITY Signature இடுகின்றனர்.. இந்த சூழ்நிலையில் நாயகன் வேலை இழக்க இவரால் மாதத் தவணையை சரியாக கட்ட முடியாமல் 5 மாதங்களாக தவிக்கிறார்.. இதனால் உற்றார் உறவினர்கள் மத்தியில் அவமானப்படுத்தப்படுகிறார்.
இந்த பிரச்சனைகளால் ஒரு கட்டத்தில் நாயகனை மனைவி வெறுக்க ஆரம்பிக்கிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…..
ஒரே படத்தில் ஒரே நேரத்தில் இயக்குனராகவும் நாயகனாகவும் அறிமுகமாக இருக்கிறார் சதாசிவம்.. எந்த பில்டப் காட்சிகளும் வைக்காமல் யதார்த்த பக்கத்து வீட்டு பையனாக கவர்கிறார்.. அழகான நாயகி சாய் தன்யா இருக்கும்போது காதல் காட்சிகளில் மெனக்கட்டு நடித்திருக்கலாம்.. ரொமான்ஸ் கூட இவருக்கு தவணை முறைதான் போல..
நாயகி சாய் தன்யா.. ஒரே நாளில் இவர் நடித்த இஎம்ஐ என்ற படமும் தரைப்படை என்ற படமும் வெளியாகி இருப்பது சிறப்பு.. நடிப்பில் கவரவில்லை என்றாலும் அழகில் கவர்கிறார்.. ஹீரோயின் அப்பாவாக பேரரசு..
கொஞ்சம் வில்லத்தனம் கலந்து மாத தவணை வசூலிப்பவராக ஆதவன் நடித்திருக்கிறார்.. பிளாக் பாண்டி சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் ஸ்ரீநாத் பிச்சையின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது.. அதற்கு ஏற்ற நடனமும் ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.. பிரான்ஸிஸ் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..
எதற்கெடுத்தாலும் லோன் எடுத்து லோ லோ என்று தங்கள் வாழ்க்கையின் நிம்மதியை தொலைக்கும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் இந்த படம் சமர்ப்பணம்.. எந்த ஹீரோவும் கிடைக்காதால் தானே ஹீரோவாக இருக்கிறார் இயக்குனர் சதாசிவம்.. அதற்கு கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்திருக்கலாம்..
எடிட்டர் ஆர். ராமர் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார்..
கடன் வாங்கி கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் பாமர மக்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார்.. மக்கள் நலனுக்கு உதவிட பல அரசு திட்டங்கள் இருக்கும்போதும் அதையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சதாசிவம் சின்னசாமி..
EMI Maadha Thavanai movie review

