டப்பாங்குத்து விமர்சனம்.. தெருக்கூத்து பெருமை
டப்பாங்குத்து விமர்சனம்.. தெருக்கூத்து பெருமை
தெருக்கூத்து கலைஞர்களைப் பற்றிய பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அந்த வகையில் மதுரை கலைஞர்களைப் பற்றிய படம் இது..
ஸ்டோரி…
தனது தாத்தா வழியில் தெருக்கூத்து கலைகளை வளர்க்கும் நாயகன் சந்திரபாண்டி.. நாயகன் மீது நாயகிக்கு அளவற்ற காதல்.. இவரின் குழுவில் இணைந்து நடனம் ஆட வேண்டும் என விரும்புகிறார்.. இந்த சூழ்நிலையில் நாயகியின் தாய் மாமாவோ அவளை பணக்காரர்களுக்கு விருந்தாக்க நினைக்கிறார்.
நாயகனும் நாயகியும் ஒன்று சேர நினைக்கையில் காதலுக்கு நாயகியே தடையாக நிற்கிறார்.. சிறுவயதிலேயே தன் அம்மா அப்பாவை விட்டு ஓடி விட்டதால் தன் அம்மா யார் என்று தெரியாமல் தான் வளர்ந்து விட்டேன்.
அவரை கண்டுபிடிக்கும் வரை திருமணம் இல்லை என தடை விதிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது.? தாய்மாமன் என்பவர் யார்? அவனின் சதித்திட்டம் என்ன.? நாயகியின் அம்மா அப்பா யார்.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
Sankarapandi, Deepthy, Kadhal சுகுமார்
டிவி சீரியல் தொடர்களில் அசத்திய சங்கரபாண்டி நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் இது.. காதல் ஆட்டம் பாட்டம் என தன் நடிப்பில் மெருகேற்றி இருக்கிறார்.. படத்தில் பல உணர்வுகளை பாடல் காட்சிகள் வெளிப்படுத்தி இருக்கிறது அதன் மூலம் தன்னுடைய நடிப்பையும் அழகாக பிரதிபலிக்கிறார் சங்கரபாண்டி.
நாயகி தீப்தியை சுற்றியே கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் தன் பெற்றோர் பற்றிய ரகசியத்தை நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் காட்சியில் தீப்தி நடிப்பு ரசிக்க வைக்கிறது..
இதுவரை காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்ட சுகுமார் இனி உடுக்கை பூசாரி என்றும் அழைக்கப்படலாம்.. அந்த அளவிற்கு அருமையான வேடத்தை வெளிப்படுத்தியுள்ளார்..
சைக்கிள் மாமாவும் வில்லத்தனம் கலந்த நடிப்பில் கவர்கிறார்..
தொழிலதிபர் பூபதி, நாயகனின் அம்மா, நாயகியின் வளர்ப்பு தாய் என மற்ற மற்ற கேரக்டர்களும் படத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
சரவணன் என்பவர் இசையமைத்துள்ளார்.. படத்தில் தலைப்பையும் திரைக்கதையையும் புரிந்து அதன்படி இசை பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.. 45 நதிகள் கொண்ட ஒரு பாடலும் படத்தில் இடம்பெற்றுள்ளது.. அந்த கவிஞரையும் பாராட்ட வேண்டும்..
ஒளிப்பதிவாளர் ராஜா கே.பக்தவச்சலத்தின் கேமரா கண்களுக்கு குளிர்ச்சி.. நடன இயக்குநர் தீனாவின் பணியை பாராட்ட வேண்டும்.. தெருக்கூத்து என்றாலும் ஆபாசம் இல்லாமல் அழகான நடனத்தை வடிவமைத்திருக்கிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் குணசேகரன்.. அழிந்து வரும் தெருக்கூத்து கலையை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை வசனங்கள் மூலம் நிரூபித்திருக்கிறார்..
முத்து வீரா என்பவர் டப்பாங்குத்து படத்தை இயக்கியிருக்கிறார்..
1960களில் வந்த படங்களில் பெரும்பாலும் வசனங்களை விட பாடல்கள் மூலமே காட்சியின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கும்.. அந்த வகையில் இந்த டப்பாங்குத்து படத்தில் பல காட்சிகளை பாடல்கள் மூலம் உணர செய்திருக்கிறார் இயக்குனர் முத்துவீரா..
சிறு சிறு குறைகள் இருந்தாலும் தெருக்கூத்து கலையை போற்றும் விதமாக இந்த படத்தை கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.. அவர்களின் முயற்சியை பாராட்டலாம்..
Produced By : Modern Digitech Media LLP – S. Jegannathan
ஆக இந்த டப்பாங்குத்து.. தெருக்கூத்து பெருமை.
Duppankuthu movie review

