புஷ்பா 2 நெரிசல்..: ரேவதி மரணத்திற்கு ₹25 லட்சம் வழங்கி அல்லு அர்ஜுன் உருக்கம்

புஷ்பா 2 நெரிசல்..: ரேவதி மரணத்திற்கு ₹25 லட்சம் வழங்கி அல்லு அர்ஜுன் உருக்கம்

 

 

 

புஷ்பா 2 நெரிசல்..: ரேவதி மரணத்திற்கு ₹25 லட்சம் வழங்கி அல்லு அர்ஜுன் உருக்கம்

 

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான ‘புஷ்பா 2’ படம் டிசம்பர் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தின் ரிலீஸ்-க்கு முன்பே படத்தின் வியாபாரம் மட்டும் 1000 கோடியை தாண்டி விட்டது.

முதல் நாள் வசூலும் உலகளவில் ₹ 300 கோடியை நெருங்கிவிட்டது. இதனால் திரை உலகமே புஷ்பா 2 படத்தை வியந்து பார்த்து வருகின்றனர். முதல் நாள் படத்தை வரவேற்க பெருமளவில் கூட்டம் திரண்டது.. ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் படம் பார்க்க வருகை தந்திருந்தார் நாயகன் அல்லு அர்ஜுன்.

தியேட்டர் நிர்வாகம் சார்பிலும் அல்லு அர்ஜுன் சார்பிலும் காவல்துறைக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.. இந்த சூழ்நிலையில் அல்லு அர்ஜுன் வருகை தெரிந்த ரசிகர்கள் பெருமளவில் கூட ரசிகை ரேவதி என்பவர் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த செய்தியை அறிந்த நாயகன் அல்லு அர்ஜுன் உருக்கமாக வீடியோ பதிவில் இட்ட பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில்…

ரேவதியின் மரணம் குறித்து அல்லு அர்ஜுன் பதிலளித்துள்ளார்..

*சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தோம்.. அந்தச் செய்தியால், புஷ்பா-2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை..

ரேவதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. என் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குவேன்…

எங்கள் குழுவினரிடம் இருந்து எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம்..

இவ்வாறு அல்லு அர்ஜுன் அந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.

Allu Arjun emotional video about his fan death

 

Allu Arjun helped ₹25 lakhs to Revathi family who died at Pushpa2 premiere