திவ்யா விமர்சனம்… ஜாதீ-யில் எறிந்த காதல்
திவ்யா விமர்சனம்… ஜாதீ-யில் எறிந்த காதல்
ஸ்டோரி…
ஆர்.ஜே.பி + சபி + ஜிவி.. இவர்கள் மூவரும் நண்பர்கள்.. ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.. இதே கல்லூரியில் வந்து இவர்கள் வகுப்பில் சேர்கிறார் நாயகி கேத்தி.. முதலில் இவர்களுக்கு மோதலாக நட்பு உருவாக அதுவே காதலாக மாறுகிறது..
நாயகனின் (RJP) நல்ல மனதை பார்த்து காதலிக்கிறார் கேத்தி.. அதன் பின்னர்தான் அவர் ஒரு கீழ் ஜாதி பையன் என்று தெரிய வருகிறது.. இது இவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.. அவசரமாக ஒரு வரன் பார்த்து நிச்சயம் செய்து விடுகின்றனர்..
அதன் பிறகு நாயகி திவ்யா என்ன முடிவு எடுத்தார்.? என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
நாயகன் – ஆர்.ஜே.பி
நாயகி – கேத்தி
வில்லன் – செந்தில்
நாயகன் தாத்தா – பவுன்ராஜ்
நாயகி அப்பா – அனந்த் ராம்
நாயகி அம்மா – கலாவதி
நண்பர்கள் – சபி, ஜிவி

நாயகன் நாயகி நண்பர்கள் அவர்களது பெற்றோர்கள் என அனைவரிடமும் எதார்த்த நடிப்பை காண முடிகிறது..
பெரும்பாலும் நடிகர்கள் புது முகங்கள் என்பது அவர்கள் நடிப்பில் தெரிகிறது.. இயக்குனர் இன்னும் சிரமப்பட்டு அவர்களிடம் நடிப்பு திறமையை வாங்கி இருக்க வேண்டும்.. பல இடங்களில் வசனங்கள் உதட்டளவில் ஒட்டவில்லை..
என்னதான் பல பிரச்சனை வந்தாலும் காதலுக்கு நண்பர்கள் என்றென்றும் துணை நிற்பார்கள் என்பதை காட்சிகளில் உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..
செல்போன் காலம் வந்து விட்டாலும் இந்த சாதிசெல் இன்னும் மாறவில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு: RJP Media
தயாரிப்பாளர்: கலாரவி
எழுத்து மற்றும் இயக்கம் : RJP
இசை: சங்கர் ராம்
ஒளிப்பதிவு : செல்வகுமார்
எடிட்டர்: வளர்பாண்டி
பாடலாசிரியர்: கவிகண்ணண்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வினோத்
மக்கள் தொடர்பு : சரண்

சங்கர் ராம் என்பவர் இசையமைத்துள்ளார் பெரும்பாலும் சவுண்ட் ரெக்கார்டிங் லைவ் முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இது படத்திற்கு ஒரு பக்கம் பலவீனம் என்றாலும் சில இடங்களில் பலமாகவே காணப்படுகிறது.. பாடல்கள் ஓகே ரகம்தான்.. காதல் தோல்வி பாடல் வரிகளும் ரசிக்க வைக்கிறது..
வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம.. போலீஸ் ஸ்டேஷனில் ஒரு காட்சியில் பெற்றோர்கள்.. ஏன்டா இப்படி செஞ்ச என்று அவர்களது பிள்ளைகளை அடித்து விட்டு அப்போதே போலீஸ் அருகில் நிற்க அவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்ற வசனங்கள் ஒட்டவில்லை..
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. சின்ன பட்ஜெட்டுக்கு ஏற்ப அவரது ஒளிப்பதிவு தெரிகிறது..
இயக்குனர் ஆர் ஜே பி.. இவரே நாயகனாக நடித்து இயக்கியிருக்கிறார்.. எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை நகர்த்திருக்கிறார்.. ஆனால் இவரை பாராட்ட வேண்டும்.. நாயகனின் பெயரை படத்திற்கு வைக்காமல் நாயகியின் கேரக்டர் பெயரை சூட்டி இருப்பது சிறப்பு..
வழக்கமான நண்பர்கள் கலாட்டா.. அதன் பின் காதல்… அதன் பின் சாதி மோதல் பகை இப்படியாகவே வழக்கமான டெம்ப்லேட் கதையுடன் படத்தை நகர்த்தி இருப்பது நம்மால் அடுத்த காட்சிகளை யூகிக்க முடிகிறது.. ஆனால் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று..
Divya movie review

