மாயக்காளான் – ஹீரோவாகி படம் இயக்கும் காமெடி நடிகர் கொட்டாச்சி

மாயக்காளான் – ஹீரோவாகி படம் இயக்கும் காமெடி நடிகர் கொட்டாச்சி

 

மாயக்காளான் – ஹீரோவாகி படம் இயக்கும் காமெடி நடிகர் கொட்டாச்சி

 

மறைந்த நடிகர் விவேக் உடன் பல படங்களில் நடித்தவர் காமெடியன் கொட்டாச்சி.. இவரது மகள் மானஷ்வி குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.. தற்போது அவர் வளர்ந்து ஒரு படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் கொட்டாச்சி தற்போது ஒரு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அவரே இயக்குனராகவும் அறிமுகம் ஆகிறார்..

‘மாயக்காளான்’ திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்..

பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் நடிகர் கொட்டாச்சி ,

இதில் கொட்டாச்சி, கஜேஷ், வையாபுரி, ‘காதல்’ சுகுமார், கே. சி. பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஆசிப் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் இசையமைக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை ராஜேஸ்வரி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் ஜி. முத்துக்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் தென் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

Director Actor Kottachi in lead role Maaya Kaalan

 

 

 

Related articles