தேசிங்கு ராஜா 2 விமர்சனம்..

தேசிங்கு ராஜா 2 விமர்சனம்..

தேசிங்கு ராஜா 2 விமர்சனம்..

ஸ்டோரி…

காவல்துறையை சுற்றி வளைத்து இந்த தேசிங்கு ராஜாவின் கதை களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் எழில்.. அப்ப தேசிங்கு ராஜா முதல் பாகத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லவே இல்லை.

ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பாக விமலும் மற்றொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பாக புகழும் உள்ளனர்.. இவர்களிடையே லஞ்சம் மாமூல் கலெக்ஷனில் பிரச்சனை வருகிறது.

இறுதியில் எந்த போலீஸ் ஸ்டேஷன் ஜெயித்தது.? என்பதை காமெடி என்ற பெயரில் கமர்சியலாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் எழில்…

 


கேரக்டர்ஸ்…

கதை நாயகனாக விமல்.. காக்கிச்சட்டை உடையில் கலகலப்பாகவும் கலர்ஃபுல்லாகவும் தெரிகிறார்.. நாயகியை காதலிக்கிறார்.. ரொமான்ஸ் செய்கிறார்.. சண்டை போடுகிறார்.. இப்படியாக நடித்துள்ளார்.

அட என்னையா இவர்..?? எல்லா சீனிலும் முதல் சீன் மாதிரி இவ்வளவு பில்டப் என்று கேட்கும் அளவிற்கு வசனம் உள்ளது.. அதையே பிரதிபலிக்கிறார் விமல்.

அடுத்த ஹீரோ ஜனா.. இவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் மகன் என்பதால் இவருக்கு எத்தனை காட்சிகள் வைத்தாலும் நாமெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.. நாம் பொறுத்து பார்க்க தான் வேண்டும்..

அந்த அளவிற்கு இவரும் வருகிறார்.. கிளைமாக்ஸ் வரை வந்து போகிறார்,

போலீஸ் அதிகாரியாக ஹீரோயின் புஜிதா… நாலு டயலாக் பேசி இருக்கிறார்..

பெண் போலீஸ் வர்ணஜாலமாக புகழ்.. மந்திரி ரவிமரியா… ஆகியோர் தங்கள் பங்களிப்பில் சிறப்பு..

போலீசாக புகழ், சாம்ஸ், சிங்கம்புலி, சுவாமிநாதன் மற்றும் மொட்ட ராஜேந்திரன், கிங்ஸ்லி, மதுரை முத்து, மதுமிதா போன்றவர்கள் காமெடின்னு நினைச்சு ஏதோ பண்றாங்க..

இந்தப் படத்திற்கு சிறிதேனும் எதிர்பார்ப்பு இருக்க காரணம்… நாயகன் விமல்.. இசை வித்யாசாகர்.. டைரக்டர் எழில்.. – இவர்கள் மூவரும் நம்முடைய எதிர்பார்ப்பை பாதி அளவே பூர்த்தி செய்துள்ளனர் என்று சொன்னால் அது உண்மைதான்..

 

Desingu Raja 2 movie review