தீபாவளி போனஸ் விமர்சனம்.. போனஸ் விருந்து
தீபாவளி போனஸ் விமர்சனம்.. போனஸ் விருந்து
முன்னோட்டம்..
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் தாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ, எழுதி இயக்கியிருக்கும் படம், ‘தீபாவளி போனஸ்’.
இதில் விக்ராந்த், ரித்விகா இருவரும் ஜோடியாக இணைந்துள்ளனர்..
இயக்குநர் ஜெயபால், உலக மாணவர்கள் கீதம் என்ற தலைப்பில் சுமார் 78 நாடுகளில் யுனஸ்கோ அமைப்பால் ஒளிபரப்பப்படும் பாடலை இயக்கியிருப்பவர்..
ஸ்டோரி…
தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக கதை தொடங்குகிறது.. விக்ராந்த் மற்றும் ரித்விகா இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன்.
ஒரு பணக்கார வீட்டில் நாயகி ருத்விகா வீட்டு வேலைகள் செய்து வருகிறார். நாயகன் விக்ராந்த் கொரியர் ஆபீசில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு போனஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
வீட்டிலோ மகனுக்கு டிரஸ் எடுக்க வேண்டும் பட்டாசு வாங்க வேண்டும் பலகாரங்கள் வாங்க வேண்டும் என்று கட்டாயம் ஏற்படுகிறது.
கம்பெனியில் போனஸ் கிடைக்காத காரணத்தினால் அன்று தீபாவளி ஸ்பெஷல் கடைக்காக வேறு ஒரு வேலைக்கு செல்கிறார்.. அங்கு திடீரென இவரை காவல்துறை கைது செய்து அழைத்து செல்கிறது..
அடுத்தது என்ன நடந்தது? இவரை கைது செய்ய என்ன காரணம்? தீபாவளி போனஸ் கிடைத்ததா? தீபாவளியை கொண்டாடினாரா? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
விக்ராந்த் ரித்விகா இவர்களின் மகன் ஆகிய மூவரை சுற்றிய படத்தில் ஒட்டுமொத்த கதையும் நகர்கிறது.. இருவரும் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றவர்கள் என்றாலும் ஒப்பனையிலும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
200 ரூபாய்க்கு கஷ்டப்படும் இவர்கள் முகத்தில் எந்த வறுமையும் தெரியவில்லை.. அதுபோல பிளாட்பார கடைகளில் விற்கும் பொருள் 100 200 ரூபாய் என்று இருக்கும்.. ஆனால் 500 1000 2000 வரை விற்பது ஏற்கும் படியாக இல்லை..
காலணி விற்க்கும் நபரின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது..
மரிய ஜெரால்டு படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.. கௌதம் சேதுராமன் ஒளிப்பதிவு செய்ய பார்த்தி முருகன் எடிட்டிங் செய்துள்ளார்.
பாடல்களை மகா என்பவர் எழுத கலைப்பணிகளை அருண் மேற்கொண்டுள்ளார்.. மக்கள் தொடர்பு பணிகளை தர்மதுரை மற்றும் சுரேஷ் சுகு செய்துள்ளனர்.
படத்தின் பாடலும் ஒளிப்பதிவும் படத்தின் பலத்தைக் கூட்டி உள்ளது.. படத்தொகுப்பை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் படத்தை 100 நிமிடங்களுக்குள் முடித்திருப்பது மிக சிறப்பு.
பண்டிகைக்கால போனசுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்த படம் சமர்ப்பணம்.. அவர்களின் வாழ்வியல் வலியை தீபாவளி போனஷாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இந்தப் படத்தின் வெளியிட்டு உரிமையை ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஸ் பெற்று இருக்கிறார்.. தீபாவளி விருந்தாக இந்த தீபாவளி போனஸ் படத்தை தமிழக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்..
Deepavali Bonus movie review
—

