சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்… கொள்ளை கும்பல் ப்ளான்

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்… கொள்ளை கும்பல் ப்ளான்

 

 

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்… கொள்ளை கும்பல் ப்ளான்

 

ஸ்டோரி…

லிவிங்ஸ்டன் வைத்திருக்கும் பீட்சா கடையில் பணிபுரிகிறார் நாயகன் வைபவ்.. அப்போது அவரது மகள் அதுல்யாவை காதலிக்கிறார்.. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் வைபவ்வை வைத்து ஒரு இடத்தில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் லிவிங்ஸ்டன்.. இவரது நண்பர் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக இந்த நாடகத்தை திட்டமிடுகிறார்..

அப்போது கொள்ளையடித்து விட்டு வரும்போது பணத்தை தொலைத்து விடுகின்றனர்.. எனவே அந்த பணத்தை செலுத்துவதற்காக மீண்டும் மற்றொரு கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற நினைக்கின்றனர்.. அதன்படி ஒரு வங்கியை நோட்டமிடுகின்றனர் அதன் பிறகு என்ன நடந்தது இவர்கள் நினைத்ததை சாதித்தார்களா என்பதெல்லாம் மீதி கதை..

கேரக்டர்ஸ்..

வைபவ், அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், மணிகண்டா ராஜேஷ், ஜான்விஜய், சுனில் ரெட்டி, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, ஹூசைனி, சூர்யா கணபதி, பிபின்

வைபவ் அதுல்யா இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டானாலும் திரைக்கதையில் உள்ள சுவாரசியமான குறைவு என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை..

 

கோலிவுட் காமெடி நட்சத்திர பட்டாளமே இருந்தும் பெரிய அளவில் காமெடி ஒர்க்கவுட் ஆகவில்லை.. நடிப்பும் பெரிய அளவில் சொல்லும்படியாக இல்லை..

டெக்னீசியன்ஸ்….

இமான் இசையமைத்திருக்கிறார் பாடல்கள் பெரிதாக கவனம் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தயாரிப்பு – பி டி ஜி யுனிவர்சல்
இயக்கம் – விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ்

கார்த்தி நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அமரன் படத்தை இயக்கிய ராஜேஸ்வரின் மகன் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அவரது நண்பர் அருண் கேசவ் ஆகியோர் இணைந்து இரட்டை இயக்குனர்களாக இந்த படத்தை எடுத்துள்ளனர்..

 

வங்கியை கொள்ளையடிக்கும் கதை.. அதில் காமெடி நடிகர்களை வைத்து கரை ஏறி விடலாம் என்று காமெடியை நம்பியை அளவுக்கு திரைக்கதையை இயக்குனர்கள் நம்பவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

Chennai City Gangsters movie review