செல்ல குட்டி விமர்சனம் – யாருக்கு யார் செல்ல குட்டி.?
செல்ல குட்டி விமர்சனம் – யாருக்கு யார் செல்ல குட்டி.?
நாயகியை விரும்பும் நாயகன்.. ஆனால் மற்றொரு நாயகனை விரும்பும் நாயகி என முக்கோண காதல் கதையை வித்தியாசமாக சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் சகாயநாதன்.
ஸ்டோரி…
ரித்தோ & மகேஷ் இவர்கள் இருவரும் நண்பர்கள்.. இவர்களுடன் நாயகி தீபிக்ஷா ஆகியோரும் ஒரே வகுப்பில் +2 படிக்கிறார்கள்..
மகேஷ் ஓவியம் வரைவது கவிதை எழுதுவது என திறமை மிக்க மாணவனாக வகுப்பில் திகழ்கிறார்.. அதேசமயம் இவருக்கு பெற்றோர் இல்லை என்பதால் இரக்கம் காட்டி பழகி வருகிறார் நாயகி தீபிக்க்ஷா.. இதனை காதல் என நினைக்கும் மகேஷ் தன் காதலை சொல்ல அதை மறுத்து விடுகிறார் நாயகி.
எனவே காதல் தோல்வியால் பிளஸ்-2 வகுப்பில் கவனம் சிதறி தேர்வில் தோல்வியடைகிறார் நாயகன் மகேஷ்.
மகேஷ் தவிர மற்றவர்கள் அனைவரும் கல்லூரிக்கு சென்று ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.. அப்போது ரித்தோ மீது காதல் கொள்கிறார். நாயகி தீபிக்ஷா.
ஆனால் நீ என் நண்பனின் காதலி.. உன்னை காதலிக்க எனக்கு மனமில்லை என மறுக்கிறார் நாயகன் ரித்தோ..
இதன் பிறகு நாயகி என்ன செய்தார்..? பழைய காதலை ஏற்றுக் கொண்டாரா என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகி தீபிக்ஷா.. செந்தா @ செந்தாமரை என்ற கேரக்டரில் கனமான கேரக்டர் ஏற்று அதற்கு ஏற்ப நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.. பள்ளிப் பருவம் கல்லூரி பருவம் திருமணம் கர்ப்பிணி என மாறுபட்ட நடிப்பை அந்தந்த கால கட்டங்களுக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார்.
பெண்கள் உடல் அமைப்பில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் நாயகர்களாக நடித்திருக்கும் ரித்தோ மற்றும் மகேஷ் இருவரும் தங்கள் தோற்றங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதற்கு ஏற்ப உடல் மொழியை கொடுத்து நடித்திருக்கின்றனர்..
பள்ளிப் பருவத்தில் அரும்பு மீசை அதற்குப் பிறகு தாடி மீசை என மாற்றம் காட்டப்பட்டிருந்தாலும் படத்தின் எடிட்டிங் நிறைய குழப்பம் இருக்கிறது..
அண்ணன் கேரக்டரில் நடித்த தயாரிப்பாளரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நாயகியின் அப்பா மற்றும் அம்மா கேரக்டரும் கவனிக்க வைக்கிறது.
மதுமிதா மற்றும் சாம்ஸ் கலகலப்புக்கு உதவி இருக்கின்றனர்..
இவர்களுடன் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா உள்ளிட்டோரும் உண்டு.. திடியனின் காமெடி நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
பின்னணி இசையில் சிற்பி ரசிக்க வைக்கிறார்.. டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் மற்றும் கவர்கிறது.. முக்கியமாக மகேஷ் உடன் ஒரு டூயட் ரித்தோவுடன் ஒரு டூயட் என தீபிக்க்ஷாவை ஆட வைத்துள்ளனர்.
பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஆகியோரது ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் ரசிக்க வைக்கிறது..
‘சிந்துநதி பூ’ செந்தமிழனின் வசனம் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது.. நண்பனின் காதலியை மணக்க மறுக்கும் நட்பு போற்றத்தக்க வகையில் இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்
ஆனால் அரசு பள்ளியில் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மாணவர்களை வெளியே நிறுத்தி வைக்கும் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.. 1990 களில் நடக்கும் கதையாக பயணிக்கும் சமயத்தில் மின் பம்பு செட் மீட்டர் பாக்ஸ் ரூ. 20,000 இருந்ததா என்பது கேள்விக்குறி??
அதுபோல திடியன் மற்றும் மற்றொரு குண்டு பையன் வரும் காட்சிகள் குழப்பமாக இருக்கிறது.. டயலாக்குகளும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளியில் தொடங்கிய முக்கோண காதல் கதையை திருமண வாழ்வில் முடித்து வைத்து இருக்கிறார் இயக்குனர் சகாயநாதன்.
பள்ளி காதல்.. கல்லூரி காதல் என்ன மட்டுமே செல்லும் திரைக்கதை இடைவேளைக்கு பின்பு தான் கொஞ்சம் சூடு பிடிக்கிறது.. எதிர்பாராத திருப்பங்களுடன் கதையை நகர்த்தி படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர். ஆனால் அதில் சீரியல் போன்ற நாடகத்தன்மை கலந்திருப்பதை மறுக்க முடியவில்லை.
கடைசியாக யாருக்கு யார் செல்ல குட்டி என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்..
கதை எதை நோக்கி செல்கிறது.. கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டதே என நினைக்கும் போது தான் நிறைய ட்விஸ்ட்களை வைத்து படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர் சகாய நாதன்..
Chella Kutty movie review
——

