சென்ட்ரல் விமர்சனம்… வறுமையில் வளர்ந்த தன்னம்பிக்கை
சென்ட்ரல் விமர்சனம்… வறுமையில் வளர்ந்த தன்னம்பிக்கை
ஸ்டோரி…
நாயகன் ‘காக்கா முட்டை’ விக்னேஷ்.. நாயகி சோனேஸ்வரி.. இருவரும் உறவினர்கள்.. ஒரே பள்ளியில் பிளஸ் டூ வகுப்பு படிக்கின்றனர்.. தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக கடைசி நாள் பரிட்சையை முடித்துவிட்டு அன்று இரவே சென்னைக்கு கிளம்புகிறார் நாயகன் விக்னேஷ்..
இரண்டு மாத விடுமுறையில் சென்னையில் சென்று சம்பாதித்து தன் பெற்றோர் பெற்ற வட்டி கடனை அடைக்க நினைக்கிறார்.. சென்னையில் அது ஒரு காட்டன் மில் நிறுவனம்.. முதலாளி பேரரசு &:மேனேஜர் ‘சித்தா’ தர்ஷன் இருவரும் கொடூர ஆசாமிகள்..
அங்கு சேர்ந்த முதல் நாளே ஒரு சிலர் எச்சரித்தும் வேலைக்கு செல்கிறார் விக்னேஷ்.. முதல் நாளே முதலாளியிடம் அடியும் வாங்குகிறார்..
வேலைக்கு சேர்ந்த அன்றே 2 மாத சம்பளத்தை அட்வான்ஸ் ஆக கொடுக்கிறார்கள்.. இதனால் அங்கு கட்டாய வேலையில் சேர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் விக்னேஷ்..
அந்த 2 மாதம் அந்த மோசமான நபர்களிடம் வேலை செய்தாரா.? தன் குடும்ப கஷ்டங்களை பொறுத்துக் கொண்டாரா? அந்த முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடினாரா.? வாழ்க்கையில் ஜெயித்தாரா.? அங்கு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
‘காக்கா முட்டை’ படத்தில் நம்மை கவர்ந்த விக்னேஷ் கதாநாயகனாக வளர்ந்திருக்கிறார்.. சமீபத்தில் வெளியான பீனிக்ஸ் படத்தில் சூர்யா சேதுபதியின் அண்ணனாக நடித்திருந்தார்.. ஆனால் இதில் முற்றிலும் சேவிங் செய்த முகத்துடன் பள்ளி மாணவனாக சாந்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகி சோனாவுக்கு வேலை இல்லை.. படத்தில் ஒரு நாயகி வேண்டும் என்பதற்காகவே பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது..

பேரரசுக்கு அவர் இயக்கிய படங்களிலேயே இப்படி ஒரு வேடம் கிடைக்கல.. இந்த படத்தில் அவர் வில்லன் என்றாலும் அவரது காட்சிகளில் அவரே ஹீரோவாக மாஸ் காட்டியிருக்கிறார்.. முக்கியமாக அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் அவரே எழுதியதும் நன்றாக தெரிகிறது..
மேனேஜராக ‘சித்தா’ தர்ஷன்.. இவர் அங்காடித்தெரு வில்லன் வெங்கடேஷை நினைவுபடுத்துகிறார்.. சில நேரங்களில் ஓவர் ஆக்டிங் தர்ஷன்..
மாற்றுத்திறனாளியாக குணா ஜீயின் நடிப்பும் அவரது வசன உச்சரிப்பும் ரசிக்க வைக்கிறது..
அதுபோல நாயகனின் அப்பா, வேலை செய்யும் இடத்தில் வரும் நண்பர்கள் அனைவரும் சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
இளா இசையமைத்திருக்கிறார்.. இவரது இசையில் கானா பாலா பாடிய ‘என்னடா உலகம்…’ என்ற தத்துவ பாடலும் ‘மடங்கி மடங்கி…’ என்ற காதல் பாடலும் ரசிக்க வைக்கிறது.. ஆனால் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சோகப் பின்னணியில் இருப்பது ஏனோ.? காதலுக்கு கூட ஊறுகாய் போல ஜாலி பாடல் இல்லையே.?

வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. அரியலூர் கிராமத்தின் அழகையும் சென்னையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.. முக்கியமாக கோயம்பேடு & சென்ட்ரல் ஸ்டேஷன் உள்ளிட்ட காட்சிகளில் அடடா.. சென்னையில் இப்படி ஒரு அழகா.? ட்ரோனில் அழகாக படம் பிடித்திருக்கிறார்..
நாயகன் நாயகி சைக்கிள் வரும்போது அவர்களின் நிழல் நீரோடையில் தெரிவதும் தெரிவதும்.. அதுபோல நாயகன் சென்னைக்கு வந்த பின்னரின் அவரது நண்பரின் நிழலுடன் நீரோடையில் தெரிவதும்.. ஆக காதல் & நட்பு என இரு வேறுப்பட்ட காட்சிகளை ஒரே கோணத்தில் படம் பிடித்திருப்பது சிறப்பு..
தன்னுடைய பெயர் பாரதியை நாயகனுக்கு சூட்டியிருக்கிறார் டைரக்டர்..
காட்டன் மில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபராகவும் நடித்திருக்கிறார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.. வில்லனை பழி வாங்குவதில் ஹீரோயிசம் காட்டியிருக்கிறார்.. வடக்கனாக நடித்து வில்லனை வதம் செய்திருக்கிறார்..
குடும்ப வறுமை காரணமாக சென்னைக்கு வேலை தேடி செல்லும் குடும்பங்களை காட்டியிருக்கிறார்.. அவர்கள் அங்கு எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.
பல இடங்களில் பின்னணி இசை ஒலிக்க வசனங்களின் சப்தம் குறைந்துள்ளது.. அதை எடிட்டர் கவனிக்கவில்லையா.?
வாழ்க்கையில் நமக்கு எதிராக எந்த சூழ்நிலை வந்தாலும் வன்முறையை கையில் எடுக்காமல் நன்றாக படித்து முன்னேறினால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை இந்த ‘சென்ட்ரல்’ படம் மூலம் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாரதி சிவலிங்கம்.
Central movie review

