BUN BUTTER JAM விமர்சனம் 3.5/5.. FUN BETTER JOLLY
BUN BUTTER JAM விமர்சனம் 3.5/5.. FUN BETTER JOLLY
ராகவ் மிர்தாத் இயக்கத்தில், விஜய் டிவி பிரபலம் ராஜூ ஜெயமோகன் ஹீரோவாக அறிமுகமான படம் ‘பன் பட்டர் ஜாம்’.
ஸ்டோரி…
நாயகன் ராஜூ அம்மா பிள்ளை.. நாயகி ஆதியா அம்மா பெண.. இவர்களை போல பிள்ளைகளே இல்லை என்பதுதான் அம்மாக்களின் எண்ணம்.. எனவே தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்ள வைக்க திட்டமிடுகின்றனர்..
ஆனால் பிள்ளைகளோ வீட்டிற்கு வெளியே செய்யும் தில்லுமுல்லுகள் ஏராளம்..
நாயகன் ராஜூ மற்றொரு நாயகி பவ்யாவை காதலிக்கிறார்.. இதனிடையில் பவ்யாவை மைக்கேல் தீவிரமாக காதலிக்கிறார்.. அடுத்த நாயகி ஆதியா மற்றொரு நாயகன் பப்புவை காதலிக்கிறார்..
இறுதியில் என்ன ஆனது.? நாயகன் & நாயகி இணைந்தார்களா.? பவ்யா யாரை ஏற்று கொண்டார்.? பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டார்களா அல்லது அவர்களின் விருப்பப்படி திருமணம் நடந்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
ராஜூ ஜெயமோகன், ஆதியா, பாவ்யா, விக்ராந்த், சார்லி, சரண்யா பொன்வண்னன், தேவதர்ஷினி, மைக்கேல் & பப்பு.
இன்ஸ்டாகிராம் லைக்ஸ் கூட தெரியாத அப்பாவி காலேஜ் ஸ்டுடென்ட்.. ஒரு கட்டத்தில் பொறுப்பான வாலிபன் என அழகான மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் ராஜு.. முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பு..
பவ்யா மற்றும் ஆதியா.. இருவரும் அழகிலும் நடிப்பிலும் போட்டி.. இளமை துள்ளலான நடிப்பை கொடுத்துள்ளனர்..
முக்கியமாக ஒரு காட்சியில் ராஜு அவரின் நண்பர் மைக்கேலிடம்.. ‘பவ்யா உன்னை காதலித்தாலும் ஓகே.. என்னை காதலித்தாலும் ஓகே.. நம் விருப்பத்தை விட அவளது விருப்பமே முக்கியம்.. அதை நாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்வோம் என்று பேசும் டயலாக் இன்றைய பிராக்டிகல் காதலை பெற்றோர்களுக்கு உணர்த்தும் சீன்..
தேவதர்ஷிணி, சரண்யா, சார்லி.. இவர்கள் படத்திற்கு பெரும்பலம்.. இவர்கள் குணச்சித்திர கேரக்டரிலும் காமெடியில் வெளுத்து கட்டுபவர்கள்.. அப்படி இருக்கையில் இன்னும் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்..
காலேஜ் சீனியர் ஸ்டூடண்டாக வரும் விக்ராந்த் இதில் வித்தியாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. உடல் இளைத்து ஸ்டுடென்ட் ஆகவே மாறி இருக்கிறார்..
பப்பு மற்றும் அவரது அப்பா கேரக்டர் இரண்டும் படத்தை கலகலப்பாக்கிவிட்டது..

டெக்னீசியன்ஸ்…
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபுகுமார்..
இருவரும் படத்தை பன் பட்டருடன் இணைந்த ஜாமாக சுவையாக கொடுத்திருக்கின்றனர்..
பன் பட்டர் ஜாம் என்ற டைட்டிலுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை இடை இடையே அதற்கான காட்சிகளை இணைத்து விளக்கமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தாத்..
நண்பர்கள் காதலிக்கலாமா.? பெஸ்ட்டியை காதலிக்கலாமா.? என்று 2K கிட்ஸ் கேள்விகளுக்கு அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் காதலிக்கலாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ராகவ் மிர்தாத்.

2K (Gen Z) கிட்ஸ் காதல் திருமணத்தை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்.? அவர்களின் பார்வையில் லவ்வர் யார்? நண்பர் யார்? பெஸ்ட்டி யார்? என்பதை அவர்களின் பார்வையிலும் அவர்களது பெற்றோர்களின் பார்வையிலும் விளக்கி இருக்கிறார் இயக்குனர்..
2K (Gen Z) கிட்ஸ் பார்த்து.. ‘யார்ரா நீங்க எல்லாம்.? என்று சரண்யா சொல்லும் அட்வைஸ் டயலாக் படத்திற்கு பெரிய பலம்..
Bun Butter Jam movie review

