BLOOD AND BLACK விமர்சனம்.. மனிதக் கறி
BLOOD AND BLACK விமர்சனம்.. மனிதக் கறி
ஸ்டோரி…
இருட்டு பல குற்றங்களுக்கு வழி வகுக்கும்.. குற்றம் இருந்தால் ரத்தம் இல்லாமல் இருக்குமா? ரத்தம் மற்றும் இருட்டு ஆகிய இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன்..
ஒரு பிரச்சினையில் சிக்கி உயிர் பிழைத்து வந்த நாயகியிடம் போலீஸ் அதிகாரி விசாரணையை தொடங்குகிறார்.. அவர் தனக்கு நடந்த கொடுமையை பற்றி விவரிப்பதுடன் படம் தொடங்குகிறது..
MLA ஒருவரின் மகள் ஷர்மிளா.. தனது வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தன் காதலரை சந்தித்து நெருக்கமாக இருக்க நினைக்கிறார் நாயகி ஷர்மிளா (ஷைனி) . அதன்படி தன் காதலர் சபரியை (சுகி விஜய்) அழைத்து இருவரும் ரிசார்ட் ஒன்றில் ரூம் எடுத்து தங்குகின்றனர். அப்போது அங்கே வரும் வில்லன் காதலர்களை கடத்தி சவப்பெட்டி போன்ற மரப்பெட்டியில் இருவரையும் தனித்தனியே அடைத்து வைக்கிறார்..
அதன்படி கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது எம்எல்ஏ மகளை மீட்டது யார்? அவர் மீண்டு வந்தாரா? கடத்துவது நோக்கம் என்ன? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
Starring – Yanni Jackson- Johnson Richard
Sugi Vijay- sabari
Sharmila- shyni
Kishore ram- Mani
Sanjay- sam
Aswin – max
காதல் காமம் பதட்டம் ஏமாற்றம் பரிதவிப்பு என அனைத்தையும் தங்கள் நடிப்பில் வெளிப்படுத்த முயற்சித்துள்ளனர் (சுகி விஜய் மற்றும் ஷைனி) சபரி மற்றும் ஷர்மிளா.. இவர்களின் மையப்படுத்தியே இடைவேளை வரை கதை நகர்கிறது.. அதன் பிறகு இவர்களை காப்பாற்ற ஷைனியின் தம்பியும் நண்பர்களும் வருகின்றனர்.. அவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை..
சைக்கோ கில்லர் & சீரியல் கில்லர் வில்லனை பார்த்திருப்போம்.. ஆனால் இதில் முழுக்க முழுக்க மாறுபட்டு மனிதனை தின்னும் மிருக மனிதனை பார்க்கிறோம்.. Yanni Jackson- Johnson Richard எதுவும் பேசாமலேயே தன் கேரக்டரை பேச வைத்திருக்கிறார்கள்.
Director- Gurukarthikeyan
DOP- Mohan chandra
Music director- Hari dass
PRO- Sathishwaran
Production: Blue whale entertainments
Producer : Hari Krishnan Vasudevan
ஒரு அசைவ பிரியராக இருந்தாலும் இந்த படத்தில் மனிதன் கறியை மனிதனை சாப்பிடும் காட்சியை பார்க்க அருவருப்பாக இருக்கிறது.. முக்கியமாக நாக்கை கடிப்பதும் உதட்டை கடித்து அந்த சதையை கிழிப்பதும்.. இப்படியான காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது.. அதிலும் அடிக்கடி காட்டப்படும் மனிதக் கறியில் புழுக்கள் உருளுவதை காணவே கண்றாவியாக இருக்கிறது..
படத்தின் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் ஓகே ரகம் மட்டுமே.. மனிதக் கறி ரத்தம்.. மனித மூளையே சாப்பிடுவது என ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படம் 100 நிமிடங்களுக்குள் இருப்பதால் படத் தொகுப்பாளரை பாராட்டலாம்..
மொத்தம் 6 கேரக்டர்களில் 4 கேரக்டர்களை மையப்படுத்தி இடைவேளை வரை கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் குரு கார்த்திகேயன்..
வில்லனின் தாத்தா வழி ஆராய்ச்சியை சொல்ல இந்த கொலைகளை வில்லன் செய்வதாக படத்தின் கதை சொல்லப்பட்டுள்ளது..
தமிழ் படமாக இருந்தாலும் பல காட்சிகளில் ஆங்கிலத்திலேயே கதை வசனம் நகர்த்தப்பட்டுள்ளது.. அதை தவிர்த்து இருக்கலாம்.. சிட்டி பகுதியில் இரவு நேரத்தில் கீழே வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்க ஒரு மேம்பாலத்தில் வில்லன் மனிதக் கறியை கொண்டு செல்வது எல்லாம் நம்பும் படியாக இல்லை..
Blood and Black movie review
—–

