BLACK பிளாக் விமர்சனம்… கன்ப்யூஸ் காதலர்கள்
பிளாக் விமர்சனம்… கன்ப்யூஸ் காதலர்கள்
ஸ்டோரி…
நாயகன் ஜீவா… நாயகி ப்ரியா பவானி சங்கர் இருவரும் தம்பதிகள்.. இவர்கள் சென்னை உப்பளப்பாக்கம் என்ற பகுதியில் புதிதாக வீடு வாங்கி அங்கே குடியேறுகிறார்கள்.. அந்த காம்பவுண்டில் வேறு யாரும் குடியேறவில்லை என்று செக்யூரிட்டி சொல்லி இருக்கிறார்.
ஒரு நாள் இரவில் இவர்கள் வீட்டில் நடப்பது போலவே மற்றொரு வீட்டிலும் அதே மாதிரி நடக்கிறது.. இவர்கள் அங்கே சென்று எட்டிப் பார்க்கும்போது இவர்களைப் போலவே ஜீவாவும் பிரியா பவானிசங்கரும் அங்கேயும் இருக்கிறார்கள்.
டைம் டிராவல் கதை போல இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பின்பு என ஓட்டம் நகர்ந்து கொண்டே இருக்கிறது..
அப்படி என்றால் இவர்கள் யார்? இங்கு நடப்பது அங்கும் அங்கு நடப்பது இங்குமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எல்லாம் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.. ஆனால் கிளைமாக்ஸிலும் தெளிவான முடிவு இல்லை என்பது வேறு கதை..
கேரக்டர்ஸ்..
ஜீவா & பிரியா பவானி சங்கர் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.. அவர்களுக்கு பயம் பதட்டம் குழப்பம் இந்த மூன்று முகபாவனைகளை மட்டுமே காட்ட சொல்லி இருப்பார் இயக்குனர் பாலசுப்பிரமணி.
அதிலும் இடைவேளைக்குப் பிறகு நாயகன் நாயகிக்கு ஆடை மாற்றும் வேலையில்லை.. ஒரே ஆடையில் வந்து ஒரே மாதிரி முக பாவனைகளை கொடுத்து படத்தை முடித்து இருக்கிறார்கள்..
இவர்கள் தெருவில் நடந்த சென்றால் சில இடங்களில் மட்டும் இருட்டாகி இருக்கிறது அந்த இருட்டில் சென்றால் மறைந்து விடுகிறார்கள்.. இப்படியாக பிளாக் என டைட்டில் வைத்து பிளாக் ட்விஸ்ட் வைத்திருக்கிறார்..
ஷாரா, யோகி ஜேபி, சிந்தூரி ஆகியோருக்கு வேலையில்லை..
டெக்னீசியன்ஸ்…
கோகுல் பினோயின் ஒளிப்பதிவு ஓகே.. இரவுநேரக் காட்சிகள் அருமை.
எடிட்டர் பிலோமின் ராஜ் படத்தை புரிந்து எடிட்டிங் செய்தாரோ அல்லது டைரக்டர் ஆலோசனைப்படி செய்தாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..
பின்னணி இசையில் சாம் சி.எஸ் மிரட்டி இருக்கிறார்..
ஒரு படம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் வகையில் எடுக்க வேண்டும்.. எல்லா வயதினரையும் கவர வேண்டும்.. இதில் புரிதலுக்கு ஒன்றுமில்லை.. இருவர் ஒரு பங்களாவில் மாட்டிக் கொள்கின்றனர்.. அங்கிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்கின்றனர்.
இதுபோலவே லிப்ட் திரைப்படம் வந்திருந்தது.. அதில் கவின் மற்றும் நாயகி மாட்டிக்கொள்வார்கள்.. ஆனால் அதன் பிறகு ஒரு பிளாஷ் பேக் காட்சி இருக்கும்.. அதில் தெளிவான திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும்.. ஆனால் இந்த பிளாக படக்குழுவுக்கு மட்டுமே பிடித்திருக்கும்..
இந்தத் திரைக்கதையின் மூலம் மெசேஜ் சொல்ல வேண்டாம்.. ஆனால் கதையாவது ரசிகருக்கு புரியும் படியில் சொல்லி இருக்க வேண்டும்.. இதுவே இந்த இயக்குனரின் தடுமாற்றத்தை காட்டி இருக்கிறது
ஆக பிளாக்.. கன்பியூஸ் காதலர்கள்
Black movie review

