‘பயோஸ்கோப்’ திரை விமர்சனம்… வெங்காய சினிமா
‘பயோஸ்கோப்’ திரை விமர்சனம்… வெங்காய சினிமா
‘வெங்காயம்’ என்ற தலைப்பின் மூலமே தமிழ் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
இவரது இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பயோஸ்கோப்’. ஒரு திரைப்படத்தை உருவாக்க ஒரு கிராமத்து இளைஞர் படும் வேதனைகளையும் அவர் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் வலிகளையும் அழுத்தமாக இந்த பயோஸ்கோப் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் படத்தை இயக்குவது மட்டுமல்ல ஒரு படத்தை வெளியிடுவதிலும் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதையும் இந்த ‘பயாஸ்கோப்’ உணர்த்தி இருக்கிறது..
‘பயாஸ்கோப்’ எப்படி…
ஸ்டோரி…
ராஜ்குமார் ஒரு பட்டதாரி.. இவரது கிராமத்து ஜோதிடர் அருள் வாக்குகளை நம்பி சிலர் மூடநம்பிக்கையில் வாழ்கின்றனர்.. இதனை தடுக்க நினைக்கிறார் நாயகன்..
இந்த சூழலில் இவரது உறவினர் ஒருவர் பிச்சை எடுத்து இறப்பார் என சொல்கிறார் அந்த ஜோதிடர்.. இதனால் மனம் உடைந்த அந்த உறவினர் அடுத்த நாளே தற்கொலை செய்து கொள்கிறார். “உன்னுடைய ஜோதிட கணக்குப்படி அவர் பிச்சை எடுத்து இறப்பார் என்று சொன்னாய்.. ஆனால் மறுநாளே இறந்து விட்டார்.. அதைக் கூட உன்னால் கணிக்க முடியவில்லை.. நீ ஒரு ஜோதிடர்? என கேள்வி கேட்கிறார்.. அது அவனின் விதி என்கிறார் ஜோதிடர்.
உன்னைப்போல போலி பித்தலாட்டம் செய்யும் ஜோதிடர்களை இந்த மக்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்கப் போகிறேன் என சவால் விட்டு ‘வெங்காயம்’ என்ற படத்தை தன் உறவினர் தன் அப்பா அம்மா தாத்தா பாட்டி மற்றும் உள்ளூர் மக்கள் உதவிகளுடன் திரைப்படம் எடுக்க முயற்சிக்கிறார்.. அதில் என்னென்ன சவால்களை சந்தித்தார்? படத்தை எடுக்க முடிந்ததா.? படம் வெளியானதா? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ் & டெக்னீயன்ஸ்…
ராஜ்குமார்.. சங்ககிரி ராச்குமார் என்ற பெயரிலேயே அவரது பெயர் இடம் பெறுகிறது.. ஆஹா பைண்ட் என்ற உருவாக்கத்தின் முதல் படைப்பாக இந்த ‘பயாஸ்கோப்’ இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான ஒன்றாகும..
முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ளனர்.. கேமரா முன்னால் தங்கள் நடிப்பை காட்டாமல் தாங்கள் வாழ்ந்து வரும் வாழ்வியலை அழகாக காட்சிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்..
கிரேனுக்கு ஒட்டகச்சிவிங்கி என்றும் கேமராவுக்கு கருவாச்சி என்றும் தங்களுக்கு பரிச்சயமான பெயர்களை வைத்து சினிமா கருவிகளை அழைக்கின்றனர்.. கிரேன் உபயோகித்து முருங்கைக்காய் பறிக்கும் பாட்டி சிரிப்பை வரவழைக்கிறார்..
இதில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.. சத்யராஜ் தலையில் முடி இல்லை என கிண்டல் அடிக்கும் பாட்டி என ஒவ்வொருவரும் ரசிக்க வைக்கின்றனர்..
தாஜ்நூர் இசையமைத்துள்ளார்… பாடல்கள் ஓகே ரகமே.. இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்ரமணி, பெரியசாமி இணைந்து தயாரித்துள்ளனர்..
என்னப்பா காதல் இல்லாதத தமிழ் படமா.? என்று நாம் ஏங்கி இருக்கும் வேளையில் ஒரு காதல் ஜோடியை வைத்து அவர்கள் குடும்பத்திற்குள் மோதலை வைத்து அதை இந்த ‘வெங்காயம்’ படத்துடன் இணைத்து புதிய ரூட்டில் சோசியல் மெசேஜ் கொடுத்து இருக்கிறார் டைரக்டர் ராச்குமார்.
Bioscope movie review

