அங்கம்மாள் விமர்சனம்.. 4/5.. ஜாக்கெட் போட பிடிக்காத அடங்காத தங்கம்மாள்

அங்கம்மாள் விமர்சனம்.. 4/5.. ஜாக்கெட் போட பிடிக்காத அடங்காத தங்கம்மாள்

அங்கம்மாள் விமர்சனம்.. 4/5.. ஜாக்கெட் போட பிடிக்காத அடங்காத தங்கம்மாள்

அங்கம்மாள்… பிடிவாதக்காரி. தைரியம் காரி.. பீடி சுருட்டு புகை பிடிப்பவர்.. ஜாக்கெட் அணியாதவர்.. பால் வியாபாரம் செய்பவர்.. இவர்தான் இந்த பட கதை நாயகி கீதா கைலாசம்..

கணவரை இழந்த கீதா தன் இரு மகன்களை வளர்த்து வருகிறார்.. முதல் மகன் பரணி விவசாயம் செய்கிறார்.. இரண்டாவது மகன் சரண் டாக்டருக்கு படித்து வருகிறார்.

முதல் மகனுக்கு மனைவி மகள் உண்டு.. இந்த சூழ்நிலையில் இரண்டாவது மகன் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை காதலித்த வருகிறார்.. பெண் வீட்டில் சம்மதம்.. அவர்கள் மாப்பிள்ளை பார்க்க வர காத்திருக்கிறார்கள்..

ஆனால் தன் அம்மா ஜாக்கெட் அணியும் பழக்கம் இல்லாத கிராமத்து பெண்மணி.. எனவே தான் படித்து வளர்ந்த ஸ்டேட்டஸ் ஏற்ப அம்மாவும் மாற வேண்டும் என நினைக்கிறார்..

இந்த சூழ்நிலையில் அண்ணியுடன் இணைந்து அம்மாவை ஜாக்கெட் போட வைக்க எல்லாம் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்..

என்னுடைய பழக்கம்.. வரப்போகிற மருமகளுக்காக என்னுடைய பழக்கத்தை மாற்றிக் கொள்ள முடியாது என மறுக்கிறார்.. ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து செய்தும் பலனில்லை..

அம்மாவுக்காக மகன் தன் நிலையை மாற்றிக் கொண்டாரா அல்லது மகனுக்காக அம்மா தன் நிலையை மாற்றிக் கொண்டாரா.? இறுதியில் என்ன நடந்தது காதல் கல்யாணம் நடந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

மறைந்த கே. பாலச்சந்தரின் மருமகள்தான் இந்த கீதா கைலாசம்.. இவர்தான் கதையின் ஆணிவேர் என்பதை உணர்ந்து ஒட்டுமொத்த படத்தையும் ஜாக்கெட் அணியாத தன் தோளில் சுமந்திருக்கிறார்..

பிடிவாதம்.. கரைப்படிந்த பற்கள்.. குடும்பத்துக்காக பால் விற்று கஷ்டப்படும் ஒரு யதார்த்த பெண்மணியாக வாழ்ந்திருக்கிறார்.. இது மட்டுமில்லாமல் அங்கம்மாளின் பழைய ரொமான்டிக் லவ் சீன்ஸ் சுவாரசியத்தை கூட்டுகிறது..

கிராமத்து நையாண்டி வசனங்கள் கை தட்ட வைக்கிறது.. ஜாக்கெட் அணிந்தால் அது கும்மென்று நிற்கும் என்று கிராமத்து பெண்களின் சீண்டல் வேற.

ஆனால் அங்கம்மாள் பேசும் ம… று என்று கெட்ட வார்த்தை சகட்டு மேனிக்கு இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..

வட சென்னை-யில் ஐஸ்வர்யாவின் தம்பியாக நடித்த சரண் தான் கதாநாயகன்.. காதலிக்கும் உள்ள ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது.. வரப்போற மனைவிக்காக தன் அம்மாவை மாற்ற நினைக்கும் ஆண்களை தன் கேரக்டரில் பிரதிபலிக்கிறார் சரண்.

தியேட்டரில் அவர்கள் செய்யும் லீலைகள் மழைக்கால குளிரில் சூடேற்ற்றும்.

ஒரு காட்சியில் நாயகன் கட்டிக்க போகும் பெண் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வருவது.. பழைய தலைமுறைக்கும் நவீன பெண்களுக்கும் உள்ள மாறாத மனப்பொருத்தத்தை காட்டுகிறது

பல படங்களில் காமெடியனாக பார்த்த ‘நாடோடிகள்’ பரணி இதில் எமோஷன் காட்சியில் கலக்கி இருக்கிறார்.. தன் தம்பிக்கும் தனக்கும் தாய் காட்டிய பாரபட்ச பாசத்தை அவர் பேசும் வசனங்கள் மூலம் சிந்திக்க வைக்கிறார்..

பரணி மனைவியாக நடித்த தென்றல் யதார்த்தம்.. மாமியாருக்கு கட்டுப்பட்டாலும் சில இடங்களில் சீறும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்..

கோழி பண்ணை செல்லத்துரையில் தங்கையாக நடித்த சத்யதேவி இதில் காதலி கேரக்டர்.. மாமியார் ஜாக்கெட் அணியாதது ஒரு பெரிய குற்றமல்ல.. அதனால் தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று அவர் சொல்லும் காட்சி பெண்களின் மன உணர்வை காட்டுகிறது..

டெக்னீசியன்ஸ்…

படத்தின் ஒளிப்பதிவு இசையும் ரசிக்க வைக்கிறது.. முக்கியமாக பாடல்கள் கதையுடன் ஒன்றி பயணிப்பதால் நம்மால் பாடல் வரிகளையும் ரசிக்க முடிகிறது..

ஜாக்கெட் போட மறுப்பவர்.. இது ஒரு கதையா.?. இதை எப்படி நகர்த்த முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் இந்த படத்தை 2 மணி நேரம் அருமையான சுவாரசியமான சம்பவங்களுடன் நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன்..

கிராமத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களை நினைவுப்படுத்தி கிராமத்துக்கு சென்று வந்த உணர்வை தரும் படமாக அமைந்துள்ளது..

இந்தப் படத்தை படக்குழுவினர் விருது விழாவிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளனர்.. நிச்சயமாக சில விருதுகளை தட்டி வரும் என நம்பலாம்..

 

Angammal movie review