அனந்தா விமர்சனம்… புட்டபர்த்தி சாய்பாபா மகிமை

அனந்தா விமர்சனம்… புட்டபர்த்தி சாய்பாபா மகிமை

 

அனந்தா விமர்சனம்… புட்டபர்த்தி சாய்பாபா மகிமை

 

கதை…

மறைந்த புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் மகிமையை சொல்லும் படமாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உருவாக்கி இருக்கிறார்.

ஐந்து பக்தர்களின் குடும்பங்கள்…

ஜெகபதிபாபு.. ஒய் ஜி மகேந்திரன்… சுஹாசினி.. அபிராமி.. ஒரு வெளிநாட்டுக்காரர்..

இவர்கள் வாழ்வில் நடந்த துயர சம்பவங்களின் போது சாய்பாபா இவர்களுக்கு எப்படி அருள் வழங்கினார்.. அவர்களுக்கு எப்படி வாழ்வில் நிம்மதியை கொடுத்தார்.. அவர்களை எப்படி மீண்டும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கினார் என்பதை தொகுத்து வழங்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

ஜெகபதிபாபு, ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, சுஹாசினி, ஸ்ரீரஞ்சனி, அபிராமி வெங்கடாசலம்.. ஒவ்வொருவரும் தங்கள் அனுபவ நடிப்பில் பக்தியுடன் ரசிகர்களை பரவசப்படுத்துகின்றனர்..

சாய் பாபாவின் அருள் எப்படி கிடைத்தது என்பதை காட்சியாக நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா..

ஒளிப்பதிவு : சஞ்சய்
இசை : தேவா

ஒரு பக்தி படமாக இருந்தாலும் இதன் ஒளிப்பதிவும் இசையும் ஒரு முழு நீள திரைக்காவியமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.. சாய்பாபாவின் மகிமையை சொல்லும் பாடலில் தேவாவின் இசையும் பாடல் வரிகளும் படத்திற்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது..

தயாரிப்பு : கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா

அண்ணாமலை – பாட்ஷா – சத்யா – இந்திரன் சந்திரன் என அதிரடி ஆக்சன் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா.. இவரது இயக்கத்தில் பக்தி படமா என்ற கேள்வி எழலாம்.. இவரே அழகான ஆஹா மற்றும் சங்கமம் ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.. புட்டபர்த்தி சாய்பாபாவின் நிஜக் காட்சிகளையும் காட்டி பரவசப்படுத்தி இருக்கிறார்..

ஐந்து பேரும் கதை.. அதை சொல்லும் விதம்.. அதனால் படம் சோர்வை தருகிறது.. எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளை கொடுத்து இருந்தால் இந்த பக்தி படம் அனந்தா இன்னும் ரசிகர்களை ஆனந்தப்படுத்தி இருக்கும்..

இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது..

 

Anandha movie review

—–