கவர்னரை சந்தித்தார் விஜய்.; அறிக்கையை மக்களுக்கு வழங்கிய புஸ்ஸி ஆனந்த் & நிர்வாகிகள் கைது
கவர்னரை சந்தித்தார் விஜய்.; அறிக்கையை மக்களுக்கு வழங்கிய புஸ்ஸி ஆனந்த் & நிர்வாகிகள் கைது
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும் இன்று டிசம்பர் 30ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை சந்தித்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.. அப்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் விஜயுடன் உடன் இருந்தனர்..
இந்த நிலையில் விஜய் வெளியிட்ட அறிக்கையை பிரசுரமாக சென்னை கோயம்பேட்டில் வீ ஆர் மால் முன்பு துண்டு பிரசுரமாக தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் வழங்கினர். TVK மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. மேலும் நோட்டீஸ் வழங்கிய த.வெ.க மகளிரணியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏன் கைது செய்கிறீர்கள்? நாங்கள் என்ன தவறு செய்தோம்.. என அந்த பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நீங்கள் அனுமதியின்றி கூடியிருப்பதாகக் கூறி அவர்களை போலீஸார் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anand and Vijay fans arrested by Tamilnadu police



