என் கண்களை பார்த்துக்குங்க..; பாக்யராஜ் இறந்த பிறகு அவரது பெயரில் உருக்கமான கடிதம்..
என் கண்களை பார்த்துக்குங்க..;
பாக்யராஜ் இறந்த பிறகு அவரது பெயரில் உருக்கமான கடிதம்..
ஜூன் 27 ஆம் தேதி தமிழக திரை உலகை உலுக்கிய மரணம் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் மரண செய்தி.. காலையில் ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார்.. இவரது குருநாதர் பாரதிராஜா மரணமடைந்து சரியாக 16 நாள் கழித்து அவரது சிஷ்யன் பாக்யராஜ் மரணம் திரை உலக ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்..
கே. பாக்யராஜின் வேண்டுகோளின் படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது..
அன்றைய தினமே தமிழக முதல்வர் விஜய் நேரில் அஞ்சல் செலுத்தினார்.. மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் பார்த்திபன், பாண்டியராஜன் சரத்குமார் ராதிகா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
அடுத்த நாள் ஜூன் 28 அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க சென்னை பெசன்ட் நகரில் காலை 11 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.. திரைக்கதை எழுதுவதில் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பாக்யராஜின் உடல் மீது அவரது ஸ்கிரிப்ட் பேப்பர் வைக்கப்பட்டது..
இந்தப் பேரதிர்ச்சியில் இருந்து தமிழ் திரை உலகம் இன்னும் மீளாத நிலையில் அவரது அலுவலகத்தில் இருந்து பாக்யராஜ் பெயரில் அவரின் ட்விட்டர் தளத்தில் ஒரு கடிதம் வெளியாகி உள்ளது.. அந்த கடிதம் இதோ
சந்தோஷத்தில மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” அன்புடன் உங்கள்
K பாக்யராஜ்
நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்…
அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன்.. பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக! அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். “இருக்கிறேன்” -பார்த்தீர்களா? இன்னும் …. கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்!
வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும்.
எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது.
Thanks!
நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே.
இனி நான்….
நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்..
An emotional letter From the office of Director Actor Bhagyaraj
https://x.com/ungalkbhagyaraj/status/2071919638750060871?s=46

