‘அது வாங்குனா இது இலவசம்’ விமர்சனம்..; உழைச்சா வெற்றி இலவசம்.. தப்பு செஞ்சா தண்டனை இலவசம்

‘அது வாங்குனா இது இலவசம்’ விமர்சனம்..; உழைச்சா வெற்றி இலவசம்.. தப்பு செஞ்சா தண்டனை இலவசம்

 

‘அது வாங்குனா இது இலவசம்’ விமர்சனம்..; உழைச்சா வெற்றி இலவசம்.. தப்பு செஞ்சா தண்டனை இலவசம்

 

ஸ்டோரி…

குடி கொள்ளை திருட்டு என்ற சுற்றும் இளைஞர்கள் நாயகி பூஜாஸ்ரீ மீது ஆசைப்படுகின்றனர்.. ஒரு கட்டத்தில் அந்த நாயகியே இவர்களுக்கு வில்லியாகிறார்.

ஒரு பெண் நண்பர்கள் வாழ்வில் வந்து விட்டால் நண்பர்களிடையே பிரிவு ஏற்படுவது உண்டு.. அந்தப் பெண்ணால் இவர்களின் வாழ்க்கையை தொலைக்கின்றனர்.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

விஜய் டிவி ராமர் கதையின் நாயகனாக நடிக்க நாயகியாக கன்னட நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார்..

டிவி நிகழ்ச்சிகளில் அடிக்கடி ராமர் சொல்லும் போலீசை கூப்பிடுங்க… என்னம்மா இப்படி பண்றீங்க என்ற டயலாக்குகளை அடிக்கடி சொல்லி கொஞ்சம் கலகலப்பு ஓட்டுகிற மற்ற நேரங்களில் பெரிய மெனக்கிடல் இல்லாமல் நடித்திருக்கிறார் இதனால் நம்மால் முழுவதுமாக ஒன்ற முடியவில்லை ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் கண் கலங்கும் நடிப்பை கொடுக்க முற்பட்டிருக்கிறார்.

அழகியிலும் நடிப்பிலும் கவர்ந்திருக்கிறார் பூஜாஸ்ரீ.. பல காட்சிகளில் கண்களால் பேசி இளைஞர்களை ஈர்க்கிறார்..

இவர்களுடன் கலையரசன், சூப்பர் குட் சுப்ரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’.

நாம் நல்லது செய்தால் நல்லது நடக்கும்.. கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் என்பதை மையப்படுத்தி உழைத்தால் வெற்றி இலவசம்.. தப்பு செய்தால் தண்டனை இலவசம் என்பதை வலியுறுத்தி ‘அது வாங்கினால் இது இலவசம்’ என்ற கருத்தை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் செந்தில் ராஜன்..

ஆனால் முதல் பாதி முழுவதும் மொக்கையாக செல்லும் படம் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நம் மனதை கொஞ்சம் ரணமாக்குகிறது..

இந்த படத்திற்கு அர்வின் ராஜ் இசையமைத்துள்ளார்.. பாடல்கள் கவனம் பெறுகிறது.. பாடல்களை இயக்குனர் எஸ் கே செந்தில் ராஜனே எழுதியுள்ளார்.

ஒளிப்பதிவை விக்னேஷ் மலைச்சாமி கவனிக்க, நாகராஜன்.D படத்தொகுப்பு செய்துள்ளார். நடனத்தை சரவணன் வடிவமைத்துள்ளார்.. லோ பட்ஜெட் படம் என்பதால் அதன் தரம் காட்சிகளில் தெரிகிறது.. கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல கவனம் செலுத்தி இருக்கலாம்..

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு சீசன் 10’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை நமீதா வெளியிட்டார்.

பிப்ரவரி 14 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Adhu Vaanguna Idhu ilavasam movie review