ஆர்யன் விமர்சனம் 4/5… விறுவிறுப்பான போலீஸ் க்ரைம் த்ரில்லர்

ஆர்யன் விமர்சனம் 4/5… விறுவிறுப்பான போலீஸ் க்ரைம் த்ரில்லர்

 

ஆர்யன் விமர்சனம் 4/5… விறுவிறுப்பான போலீஸ் க்ரைம் த்ரில்லர்

 

ஸ்டோரி…

நாயகி ஸ்ரத்தா ஒரு டிவி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.. அப்போது நேரலையில் ஒரு நடிகரை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது பார்வையாளர்களில் ஒருவரான செல்வராகவன் அந்த நடிகரை அறைந்து விட்டு இன்னும் சில தினங்களில் 5 கொலைகள் நடக்கவிருக்கிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

அவர் சொன்னபடியே ஒவ்வொரு கொலைகளாக தொடங்கவே இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரி விஷ்ணு விஷால் வருகிறார்.

அடுத்தடுத்த கொலைகளை அவரால் தடுக்க முடிந்ததா.? செல்வராகவன் சொல்படி நடப்பது ஏன்? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.? என்பதெல்லாம் இந்த ஆரியனின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஒரு சில நடிகர்களுக்கு போலீஸ் கேரக்டர் பொருத்தமாக இருக்கும்.. கமல்ஹாசன் விஜயகாந்த், சூர்யா விக்ரம் வரிசையில் விஷ்ணு விஷால் இணைக்கலாம்..

ராட்சசன் படத்தில் போலீசாகவே பொருந்தி போன விஷ்ணு விஷால் இதிலும் மீண்டும் தன்னை கம்பீரமாக பொருத்தியிருக்கிறார்.. ஆனால் படம் முழுக்க சீரியஸான முகத்துடன் காணப்படுவதை தவிர்த்து இருக்கலாம் விஷ்ணு..

நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. இவரது காஸ்ட்யூம் கலர்புல்…. அளவான நடிப்பில் கவர்ந்து விடுகிறார்.. ஹீரோ மனைவி மானஸா சவுத்ரி சிறப்பு..

ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் மிரட்டல் என இரு மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் செல்வராகவன்..

 

டெக்னீசியன்ஸ்…

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. ஒரு க்ரைம் திரில்லருக்கு ஏற்ப விறுவிறுப்பான இசையை கொடுத்து ரசிகர்களை ஆரியனுடன் அட்டாச் செய்து விட்டார்..

பிரவீன் என்பவர் ஆரியன் படத்தை இயக்கியிருக்கிறார்… நாட்டுக்கு நல்லது செய்ய பல காத்துக் கிடக்கிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி கமர்சியல் திரில்லர் கலந்து விருந்து படைத்திருக்கிறார்..

பல திரில்லர் கதைகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த ஆரியன் ஆச்சரியப்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.. ஒருவேளை நீங்கள் சமூக ஆர்வலராக இருந்தால் சில உண்மைகள் உரைக்கலாம்…

தற்கொலை செய்து கொண்டவர் அடுத்தடுத்து டிவி நிகழ்ச்சியில் தோன்றி அடுத்தடுத்த கொலைகள் பற்றி துப்பு கொடுப்பது திரைக்கதை மீதான எதிர்பார்ப்பை எகிற செய்கிறது.. நம்மை சீட்டு நுனியில் உட்காரவும் வைக்கிறது..

 

Aaryan movie review