பரிசு விமர்சனம்.. கடமை தவறாத சிங்கப்பெண்
பரிசு விமர்சனம்.. கடமை தவறாத சிங்கப்பெண்
ஸ்டோரி…
எதையும் செய்யத் துடிக்கும் துணிச்சல் மிக்க நாயகி ஜான்விகா.. தந்தையைப் போல இவரும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறார்.. இதனால் கல்லூரியில் படிக்கும் போது இவருக்கு வரும் காதல் வலைகளில் சிக்காத பறவையாக தன் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார்..
ஒரு கட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலின் ஆதார வீடியோ இவரின் கைக்கு கிடைக்கிறது.. அந்தக் குற்றவாளிகளை இவர் சட்டத்திற்கு முன்பாக நிறுத்த முயற்சிக்கும்போது அந்த கும்பல் இவரை துரத்துகிறது..
அதன் பிறகு என்ன நடந்தது.? தான் நினைத்ததை வாழ்வில் சாதிக்க முடிந்ததா.? அல்லது குற்றவாளிகளிடம் சிக்கினாரா.? என்ன செய்தார் ஜான்விககா என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….
கதாநாயகி கதையின் நாயகி எல்லாமே ஜான்விகா.. விவசாயம் செய்யும் பெண், ராணுவ வீராங்கனையாக ஆசைப்படும் பெண், காதலை வெறுக்கும் கல்லூரி பெண் இப்படி ஒவ்வொரு கேரக்டரிலும் தன் நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
ஜான்விகாவின் தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக ஆடுகளம் நரேன்.. அனுபவ நடிப்பில் அட்வைஸ் செய்வதில் கவருகிறார்..
ஜான் ஜான் என்ற நாயகியை சுற்றும் நபராக கிரண்பிரதாப்.. இவர் கல்லூரி மாணவன் போல அல்ல.. ஜான் என்று இவர் ஒரு பெண்ணை அழைப்பது ஏனோ.?
ராஜேஷ் பாத்திரத்தில் ஜெய் பாலா.. ஹீரோ லுக்கில் ஸ்மார்ட்டாக வருகிறார்..
இவர்களுடன் மனோபாலா, சின்னப்பொண்ணு ஜோடியாக நடித்துள்ளனர்.. சில இடங்களில் இருவரும் ஓவர ஆக்டிங். மகனாக வரும் சென்ட்ராயன் ஏதோ வந்து போகிறார்.. தந்தையை மரியாதை இல்லாமல் பேசும் காட்சிகள் சகிக்கவில்லை..
உறுப்பு திருட்டு செய்யும் தொழிலதிபர் பாத்திரத்தில் சுதாகர்.. நடிப்பில் வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார்.

டெக்னீசியன்ஸ்…
தூய்மை இந்தியா.. என்ற பாடல் இனி வாலிபர்கள் பாடும் பாடலாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை..
பாடல்களும் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் கண்களுக்கு இதமாய் அமைந்துள்ளன.. ‘நன்னாரே’ பாடல் கவனம் பெறுகிறது.. இசையமைத்துள்ளார் ராஜீஷ்.
‘ஆட்டங்கள் ஆடி…. ‘,’கொஞ்சிக் கொஞ்சிப் பேசலாமா ?’ ‘போராடலாமா ?’ போன்ற பாடல்கள் வரிகளால் கவனம் பெறுகின்றன.. ஆனால் இத்தனை பாடல்கள் தேவையா.?
ஒளிப்பதிவு செய்துள்ளார் சங்கர் செல்வராஜ்.. கல்லூரி கிராமத்து அழகை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
பெண் என்பவள் இந்த சமூகத்திற்கு கிடைத்த பரிசு.. ஆண்களுக்கு கிடைத்த பரிசு என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்..
அவள் ஆணுக்கு எந்த விதத்திலும் ஒரு பெண் சளைத்தவள் அல்ல என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்
கல்லூரி விழாவில் ஜான்விகா பேசும் வசனம் ஒவ்வொன்றும் அருமையான தேவையான கருத்துக்கள்.. கலா அல்லூரி என்பவர் இயக்கியிருக்கிறார்.
கல்லூரி காலகட்டத்திற்கு ஏற்ப கமர்சியல் விஷயங்கள் இருந்தாலும் மெச்சூரிட்டியான திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் இந்த பரிசு ரசிக்கப்படலாம்..
Parisu movie review

