உதய் தீப் & ஆதேஷ் பாலா-வின் ‘சாவு வீடு’… யாரெல்லாம் வந்திருக்காங்க..?!

உதய் தீப் & ஆதேஷ் பாலா-வின் ‘சாவு வீடு’… யாரெல்லாம் வந்திருக்காங்க..?!

 

உதய் தீப் & ஆதேஷ் பாலா-வின் ‘சாவு வீடு’… யாரெல்லாம் வந்திருக்காங்க..?!

 

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினை வென்றவர் உதய் தீப்..

இவர் கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘சாவு வீடு’..

இயக்குநர் ஆண்டன் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ளது இந்த ‘சாவு வீடு’..

இதில் முக்கிய வேடத்தில் ஆதேஷ் பாலா நடித்திருக்கிறார்.

பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு செய்ய ட்யூனர்ஸ் இசையமைத்திருக்கிறார்.

துக்கம் நிகழ்ந்த வீட்டின் பின்னணியில் நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி உள்ளது.. இப்படத்தை ஆண்டன் அஜித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

‘சாவு வீடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடித்துள்ள நடிகர்களின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..

இந்த படத்தின் டைட்டில் டீசர் இன்று அக்டோபர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது..

 

Udhay deep and Aadesh Bala starring Saavu veedu