Others அதர்ஸ் விமர்சனம் 3.75/5… அதர்ஸ் சொல்லும் அட்வைஸ்

Others அதர்ஸ் விமர்சனம் 3.75/5… அதர்ஸ் சொல்லும் அட்வைஸ்

Others அதர்ஸ் விமர்சனம் 3.5/5… அதர்ஸ் சொல்லும் அட்வைஸ்

 

ஸ்டோரி..

அபின் ஹரி ஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடித்துள்ள படம் Others.

படம் தொடங்கிய சில நொடிகளில் ஒரு விபத்து நடக்கிறது.. அந்த விபத்தில் மூன்று பெண்கள் ஒரு ஆண் இறக்கிறார்.. ஆனால் ஒரு மர்ம நபர் இறந்தவர்கள் மீது தீவைத்து எரித்து விடுகிறார்..

இதனால் இறந்தவர்கள் யார் என்பது தெரியாமல் காவல்துறை திணறுகிறது.. ஒரு கட்டத்தில் இறந்தவர்கள் மூன்று பெண்கள் அவர்கள் அனைவரும் கண் பார்வையற்றவர்கள்.. ஒரு ஆசிரமத்தில் இருந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.

இதனை தீவிரமாக காவல்துறை விசாரிக்கையில் அந்த ஆசிரமத்தில் இருந்த நிர்வாகி தற்கொலை செய்து கொள்கிறார்.. அதன் பின்னணியில் நடந்தது என்ன.? என்பதெல்லாம் தொடரும் அதிர்ச்சியான சம்பவங்கள் ).?

போலீஸ் ஆதித்யா மாதவனுக்கு இரு நாயகிகள் கௌரி கிஷன் மற்றும் அஞ்சு எப்படி உதவினார்கள்.? அதர்ஸ் என்றால் என்ன.. அதற்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் மீதக்கதை..

கேரக்டர்ஸ்…

ஹீரோ ஆதித்யா மாதவனுக்கு இதன் முதல் படம்.. முதல் படத்திலேயே துணிச்சலாக இன்வேஸ்டிகேஷன் ஆபீசர் ஆக அவர் எடுத்திருக்கும் கேரக்டர் அவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது.. ரொமான்ஸ் காட்சிகள் கூடுதல் மெனக்கடல் தேவை..

ஒருவேளை ஹீரோயின் இவரை விட வயதில் மூத்தவர் என்பதால் நெருக்கம் காட்டவில்லையே என்னவோ.?

அழகிலும் நடிப்பிலும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார் கௌரி கிருஷ்ணன்.. 96 படத்தில் ஜானுவாக நம்மை கவர்ந்த கௌரி இதில் பொறுப்பான டாக்டராக அசத்தியிருக்கிறார்..

அழகிலும் கம்பீரம் சேர்த்து அஞ்சு குரியன் கவர்ந்துள்ளார்.. மூத்த மருத்துவராக ஹரிஷ் பெர்ராடி அருமை..

நண்டு ஜெகன், முனீஷ்காந்த், ஆர்.சுந்தரராஜன், மாலா பார்வதி உள்ளிட்டோரும் உண்டு.. இது ஜெகன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்..

டெக்னீசியன்ஸ்…

திரில்லர் படங்களுக்கு பதட்டத்தை நமக்குள் கடத்த இசை முக்கியமானது.. அதை அழகாக ஜிப்ரான் ஜில்லென்று நம் மனதுக்குள் ஏற்றி இருக்கிறார்.. பாடல்களும் ரசிக்க வைக்கிறது..

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்.. ஒவ்வொரு கேரக்டரையும் அழகாகவே காட்டி நம்மை கண்குளிர செய்து இருக்கிறார்..

பெரும்பாலும் இன்வெஸ்டிகேஷன் படங்களில் கமர்சியல் விஷயங்கள் அதிகம் இருக்கும்.. ஆனால் இதில் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

ஆண் பெண் என்ற இரு பாலர் தாண்டி இந்த சமூகத்தில் வாழும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார். வேதா வேதிகா என்ற கேரக்டரில் நடித்தவர் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. இவர் மலையாள சினிமாவில் கலக்கியவர்..

குற்றம் 23 படத்தில் மெடிக்கல் மாஃபியாவை காட்டியிருப்பார் இயக்குனர் அறிவழகன்.. அதுபோல இந்த கதை நகர்ந்தாலும் கிளைமாக்ஸில் நாம் எதிர்பாராத ‘அதர்ஸ்’ பற்றி சொல்லி திரில்லர் திரைக்கதை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன்..

Others movie review

—-