கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் 3.75/5.. உண்மையான காதலர்கள் இருக்கும் வரை காதல் அழிவதில்லை..

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் 3.75/5.. உண்மையான காதலர்கள் இருக்கும் வரை காதல் அழிவதில்லை..

கிறிஸ்டினா கதிர்வேலன் விமர்சனம் 3.75/5.. உண்மையான காதலர்கள் இருக்கும் வரை காதல் அழிவதில்லை..

 

ஸ்டோரி…

கும்பகோணத்தில் நடைபெறும் ஒரு கோயில் திருவிழாவில் நாயகி பிரதீபாவை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் நாயகன் கௌசிக் ராம்.. அவளைத் துரத்தி துரத்தி சென்று காதலிக்கும் அவர் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்காகவே கல்லூரியில் இணைகிறார்..

அப்போது இவரின் நண்பர் ரவி மற்றும் புவனாவின் காதல் கதை தெரிய வருகிறது. அவர்களின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இருப்பதால் அவர்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைக்க நண்பர்களுடன் இணைந்து முயற்சிக்க அப்போது சாட்சி கையெழுத்து போட பிரதீபாவின் உதவியை நாடுகிறார்.

அதன்படி அவரின் போட்டோ மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வாங்கி வக்கீல் அலெக்சியிடம் கொடுத்து ரெஜிஸ்டர் செய்ய சொல்கிறார்.. ஆனால் முதலிரவு மயக்கத்தில் இருக்கும் அலெக்ஸ் தவறுதலாக சாட்சிக்கு வந்தவர்களை லவ் ஜோடி என நினைத்து அவர்களின் போட்டோவை இணைத்து ரிஜிஸ்டர் செய்து விடுகிறார்.

இந்த சூழ்நிலையில் நாயகிக்கு விக்கி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.. அப்போதுதான் இந்த ரிஜிஸ்டர் மேரேஜ் பற்றி விவரம் தெரிய வருகிறது.. இரு குடும்பத்திலும் பிரச்சினை எரிகிறது..

கௌஷிக் காதலை ஏற்றுக் கொண்டாரா பிரதீபா.? அல்லது நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை மணந்து கொண்டாரா? இவர்களின் பிரச்சனை என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.

கேரக்டர்ஸ்…

கௌஷிக் ராம், பிரதீபா, அருள் சங்கர், சிங்கம் புலி, சில்மிஷம் சிவா, கஞ்சா கருப்பு, அலெக்ஸ் பாண்டியன், VJ ரவி & புவனா, ஜனனி மற்றும் பலர்..

காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அப்பாவி இளைஞனாக கௌசிக் ராம்.. கிளைமாக்ஸ் காட்சியில் ஆண்களையும் கண்கலங்க வைத்து விடுகிறார்..

சிரிப்பில்லாத முகத்துடன் சீரியஸான கேரக்டரில் நாயகி பிரதீபா.. நடிப்பில் சிறப்பு.. சில சீன்களில் சீரியல் நடிகை வெண்பாவின் முகச் சாயலை காண முடிகிறது..

ரவி & புவனா காதல் ஜோடியும் அழகுதான்.. இவர்களின் காதலுக்கு ஒரு டூயட் கொடுத்திருக்கலாமே..

பிரதீபாவின் தோழியாக வரும் ஜனனி அழகில் கவர்கிறார்.. நாயகனிடம் தன் காதலை சொல்லும் சீனில் கூட ஸ்கோர் செய்கிறார் ஜனனி..

பிரதீபாவின் மாப்பிள்ளையாக விக்கி.. அடடா இவர் இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே என்று இவர் மீது அனுதாபமும் ஏற்படுகிறது..

சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் ஆகிய அனுபவ நடிகர்களின் பாத்திரங்கள் வீணாக்கப்பட்டுள்ளது.. சில்மிஷம் சிவா & டி எஸ் ஆர் கேரக்டர்களில் வலுவில்லை..

பாதர் கேரக்டருக்கு அருள் பக்காவாக பொருந்தி இருக்கிறார்..

 

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: டாக்டர் ஆர் பிரபாகர், சபாபதி, ஸ்ரீ லட்சுமி

இசை: என் ஆர் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: பிரஹத் முனுசாமி

எடிட்டர் : லோகேஷ்வர்

இயக்கம்: அலெக்ஸ் பாண்டியன்

பிஆர்ஓ: நிகில் முருகன்

பவுடர் – ஹரா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரஹத் முனுசாமி இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்.. கும்பகோணத்தின் கோயில் குளங்களையும் கல்லூரியில் கலை வண்ணமாக காட்டியிருக்கிறார்.. எக்ஸ்ட்ரா லைட்டிங் எதுவும் இல்லாமல் வீட்டில் வெளிச்சத்திலேயே இவர் படம் பிடித்திருப்பது அழகு..

 

லோகேஷ்வர் எடிட்டிங் செய்திருக்கிறார்.. சேசிங் காட்சிகளில் இவரின் எடிட்டிங் வேகம் தெரிகிறது.. இரண்டாம் பாதியில் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்..

ரவி – புவனாவின் காதல் என்ன ஆனது என்பதற்கு விளக்கம் இல்லை..

ரகுநந்தன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் மனதிற்கு இதம்.. முக்கியமாக செல்லாட்டி பாடல் ரசிகர்களின் ஃபேவரைட்..

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தலை காதல் மகத்துவத்தை இதயம் முரளி பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்..

(பெரும்பாலும் எல்லாருமே தன் பெயருடன் உறவினர் பெயரை  இணைத்து போடுவார்கள்.. ஆனால் அலெக்ஸ் தன் நண்பர் பாண்டியன் பெயரை இணைத்து நட்புக்கு மரியாதை கொடுத்திருகிறார்..)

இவரும் வக்கீல் வேடத்தில் நடித்திருக்கிறார்.. படத்தில் இவரது கேரக்டர் தான் முக்கியமான ட்விஸ்ட்..

கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற தலைப்பைப் பார்த்தாலே இது கிறிஸ்து – ஹிந்து காதல் கதை என்று நினைக்கத் தோன்றும்.. ஆனால் இப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதில் சாதி மதம் கலக்காமல் காதலை கவித்துவமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்..

கிளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.. கல்நெஞ்சகாரனையும் கலங்க வைக்கும்..

 

Christina Kathirvelan movie review