நறுவீ விமர்சனம்.. ஆபத்தான வாழ்வில் கல்வியின் அவசியம்

நறுவீ விமர்சனம்.. ஆபத்தான வாழ்வில் கல்வியின் அவசியம்

நறுவீ விமர்சனம்.. ஆபத்தான வாழ்வில் கல்வியின் அவசியம்

 

ஸ்டோரி…

அடர்ந்த காட்டுக்குள் சென்ற ஐவரின் கதை தான் இந்த நறுவி..

2 ஆண்கள் 3 பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேரும் ஓர் ஆராய்ச்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்கு செல்கின்றனர்.. அங்கு சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கிறது.. அங்கு சிக்கிக் கொண்ட அவர்கள் அதிலிருந்து மீண்டார்கள்.? நடந்தது என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

நாயகனாக ஹரிஷ் அலக்.. புதுமுகம் என்றாலும் ஒரு மெச்சூரிட்டான் நடிப்பை கொடுத்திருக்கிறார்..

விஜே பப்பு & காதலி பாடினி குமார்.. எதார்த்த நடிப்பில் நகைச்சுவை கலந்து சிறப்பான நடிப்பில் அசத்தல்..

இவர்களுடன் ஜீவா ரவி, பிரவீனா, கேதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ்.ராஜா, சாரதா நந்தகோபல் ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்….

இசையமைப்பாளர் அஸ்வத் இசையில் பாடல்கள் சிறப்பு.. அனைத்தும் இனிமையாகவும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரன்.. அடர்ந்த வனப்பகுதியை கேமராவில் இன்னும் அழகாக படம் பிடித்திருக்கிறார்..

படத்தொகுப்பாளர் சுபராக்.எம்.. இரண்டு வெவ்வேறு கதைகளை சுவாரஸ்யமாக கட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர்..

ஆபத்தான வனப்பகுதி ஆராய்ச்சி.. தொலைந்த ஒருவரை தேடுதல் பயணம் என பல சுவாரசியமான விஷயங்களை கலந்து இருக்கிறார் இயக்குநர்..

கல்வியால் மட்டுமே ஒருவரது வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும்.. இன்று எளிதாக கல்வி கிடைப்பதால் அதன் அருமை சிலருக்கு சில நேரங்களில் புரிவதில்லை.. ஆனால் பழங்குடியின மக்களுக்கு கல்வியின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை எதார்த்த வாழ்வியலோடு கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுபராக் முபாரக்.. இந்த சோசியல் மெசேஜில் கமர்சியல் கலந்து சஸ்பெண்ஸ் திரில்லராக சொல்லியிருக்கிறார் டைரக்டர்..

 

Naruvee movie review