கடுக்கா விமர்சனம்… காதலர்களுக்கு காதலி தந்த கல்தா
கடுக்கா விமர்சனம்… காதலர்களுக்கு காதலி தந்த கல்தா
ஸ்டோரி…
நாயகன் விஜய் கெளரிஷ்… இவரின் நண்பர் ஆதர்ஷ்.. நாயகி ஸ்மேஹா..
நாயகனும் நண்பனும் இருவரும் நாயகியை காதலிக்கின்றனர்.. ஒரு கட்டத்தில் இருவரையும் காதலிப்பதாக சொல்கிறார் நாயகி.. இதனை அறிந்து கொண்ட நண்பர்கள் என்ன செய்தனர்.. நாயகி ஏன் இருவரையும் காதலிப்பதாக சொன்னார்.? அப்படி என்றால் அவர் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.? காதலால் நண்பர்களுக்கு பிரச்சனை வந்ததா.? நாயகி & நண்பர்கள் என்ன செய்தனர்.? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகன் விஜய் கெளரிஷ்.. நண்பராக ஆதர்ஷ் மற்றும் நாயகியாக ஸ்மேஹா.. மூவரும் புதுமுகம் என்றாலும் எதார்த்த நடிப்பை கொடுத்துள்ளனர்.. நாயகி இருவருக்கும் ஈடு கொடுத்து நான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .
ஸ்மேஹா தந்தையாக மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்டோரும் கதைக்குப் பொருத்தமான தேர்வு..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் – சதிஷ் குமார் துரைகண்ணு.. கிராமத்து பஸ் ஸ்டாப், வீடு.. பெண்கள்.. டீ கடை என அனைத்தையும் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. ஊருக்குள் சென்று வந்த உணர்வை தருகிறது..
படத்தொகுப்பாளர் – எம்.ஜான்சன் நோயல்.. இவரது பணி நேர்த்தி..
இசை – கெவின் டி,கோஸ்டா.. இவரது இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
இயக்குநர் – எஸ்.எஸ்.முருகரசு.. முக்கோண காதல் கதை என்றாலும் அதைப் பெண்களின் பார்வையில் இருந்து படமாக்கி இருக்கிறார் டைரக்டர்..
காதலை கமர்சியலாகவும் சோசியல் மெசேஜுடன் கலந்து கொடுத்து இருக்கிறார்.. கழட்டி விடுவது.. கல்தா கொடுப்பது என்ற பொருள்படும் வகையில் கடுக்கா படத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர் முருகரசு..
Kadukka movie review

