போகி விமர்சனம்… தீமை அழிப்போம்
போகி விமர்சனம்… தீமை அழிப்போம்
ஸ்டோரி…
பெண்களை ரகசியமாக கேமரா மூலம் ஆபாச படம் எடுத்து அதை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பல்.. அதனை தேடும் காவல்துறை ஒரு பக்கம்..
மறுபக்கம் அந்த கும்பலை தேடி நாயகன் நபி நந்தியும், சரத்தும் கொலை செய்கிறார்கள்..
இந்தக் கதை ஒரு பக்கம் செல்கையில் அடுத்த பக்கம்.. சிறுவயதில் பிரிந்த தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார் நாயகன்.. அவர் மீதான தனது காதலை வெளிப்படுத்த கூட இந்த கொலை பயணத்தை தொடர்கிறார்.
காதலியை கூட கண்டுக்காமல் இந்த கொலையை அவர் செய்வதன் நோக்கம் என்ன.? அவருக்கு இப்படி ஒரு வெறித்தனமான பழிவாங்கல் நோக்கம் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நபி நந்தி.. நாயகனின் முதல் படம் இந்த போகி.. பிளாஷ்பேக்கிலி சேவிங் செய்த முகம் என ஸ்மார்டாக வருகிறார்.. தொலைக்காட்சிகளில் தாடியுடன் கொஞ்சம் மிரட்டியும் இருக்கிறார்..
இவரின் தங்கையாக ‘லப்பர் பந்து’ ஸ்வாசிக்கா.. அசல் கல்லூரி பெண் போலவே இளமையாக காட்சியளிக்கிறார்.. படித்து முன்னேற துடிக்கும் இளம் பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.. ஆனால் அந்த பழங்குடியின மக்களுக்கு இவரது நிறமும் உடையும் பொருந்தவில்லை..
நாயகனின் நண்பனாக சரத் சபாஷ் பெறுகிறார்.. கலர்ஃபுல் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் பூனம் காவுர்.. காவல்துறை அதிகாரியாக வேல ராமமூர்த்தி, வில்லனாக வித்தியாசமான லுக்கில் மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சங்கிலி முருகன், ‘லீ’ கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளனர்..
முக்கியமாக லீ கார்த்தி என்பவர் தற்போதைய காட்சி.. ஃபிளாஷ்பேக் காட்சி என இரண்டிலும் தனது உடலை எடையை மாற்றி இருக்கிறார்.. பாராட்டுக்குரியது..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர்.. வெவ்வேறு காலக்கட்ட கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவில் வித்தியாசம் காட்டி இருக்கிறார்.
சமீப காலமாக வரும் படங்கள் எல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல
இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், சினேகனின் வரிகளில் பாடல்கள் கேட்கும் ரகம்.
படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் மற்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவ் ஆகியோரது பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இயக்க்குனர் விஜயசேகரன்.. நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை தங்கை பாசம், காதல், ஆக்ஷன், பாடல் என கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.
Bhoghee movie review

