சரண்டர் விமர்சனம் 4.25/5.. Surrender Your Phone in Pocket.. Surrender Yourself to Screen

சரண்டர் விமர்சனம் 4.25/5.. Surrender Your Phone in Pocket.. Surrender Yourself to Screen

 

சரண்டர் விமர்சனம் 4.25/5.. Surrender Your Phone in Pocket.. Surrender Yourself to Screen

 

ஸ்டோரி…

இரண்டு கிளை கதைகளை இணைத்து ஒரு திரில்லர் காவியமாக ‘சரண்டர்’.

ஒரு காவல் நிலையத்தில் 30+ ஆண்டுகளுக்கு மேலாக ரைட்டர் ஆக பணிபுரிகிறார் லால்.. இதே காவல் நிலையத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு பணியில் இணைகிறார் ‘பிக்பாஸ்’ தர்ஷன்.

தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நடிகராக வரும் மன்சூர் அலிகான் தனது துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.. எலக்சன் நாளில் வாக்களித்த பின் இந்த துப்பாக்கி பெற்றுக் கொள்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார்..

ஏற்கனவே ஞாபக மறதியில் இருக்கும் ரைட்டர் லால் அந்த துப்பாக்கியை லாக்கரில் வைப்பதற்கு பதிலாக வெளியே வைத்துவிட்டு லாக்கரை பூட்டி விடுகிறார்.. துப்பாக்கி தொலைந்து விடுகிறது.. இதனால் காவல் நிலையம் பரபரப்பாகிவிடுகிறது.. ஏற்கனவே மன்சூர் அலிகான் பிரச்சனை செய்பவர் அவரது துப்பாக்கி தொலைந்து விட்டால் இது மீடியாவில் கசிந்து பெரிய பிரச்சினையாகிவிடும் என்று உயர் அதிகாரி எச்சரிக்கையில் தேர்தலுக்கு முன்பு கண்டுபிடித்து விடுவேன் என்கிறார் லாலுக்கு உதவும் நாயகன் தர்ஷன்.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் பெரிய கேங்ஸ்டர் கனகுவின் தேர்தல் செலவு பணம் 10 கோடி ரூபாய் தொலைந்து போகிறது.. அவர் பணத்தை ஒரு போலீஸ்காரரிடம் கொடுத்து பத்திரமாக கை மாற்ற அவரோ ஒரு விபத்தில் சிக்கி பணத்தை தொலைத்து விடுகிறார்.. எலக்ஷன் செலவுக்கு அந்த பணம் வேண்டும் என்று அரசியல்வாதி அடம் பிடிக்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? தொலைந்து போன துப்பாக்கி கிடைத்ததா.? தொலைந்து போன பணம் கிடைத்ததா.? பணத்தை எடுத்தவர் யார்.? துப்பாக்கியை எடுத்தவர் யார்.? இந்த எலக்சன் நடைபெறுவதற்குள் இந்த இரு பிரச்சனைக்கும் தீர்வு எட்டப்பட்டதா.? என்பதை திரில்லராக சொல்லி இருக்கிறார் டைரக்டர் கௌதமன் கணபதி..

கேரக்டர்ஸ்…

கனா படத்தில் வந்த தர்ஷன் அல்ல இவர் இவர் பிக் பாஸ் தர்ஷன்.. போலீஸ் அதிகாரி என்றால் ஒரு கம்பீரம் இருக்கும்.. அந்த கம்பீரத்தோடு எதார்த்தமும் கலந்து பாடி லாங்குவேஜில் பட்டையை கிளப்பி இருக்கிறார் தர்ஷன்..

உயர் அதிகாரிக்கு உதவுவதாகட்டும் அதே சமயம் அவருக்கு எச்சரிக்கை கொடுப்பதாகட்டும் வில்லன் சுஜித் & மகன் கெளஷிக் உடன் மோதுவதாகட்டும் ஒவ்வொரு பிரமிலும் கெத்து காட்டியிருக்கிறார்..

பல படங்களில் மிரட்டல் வில்லனாக வந்த லால் இதில் நேர்மையான சாந்தமான ரைட்டராக கலக்கி இருக்கிறார்.. ரைட்டர் லால் செலெக்க்ஷன் ரொம்பவே ரைட்..

மலையாள நடிகர் வில்லன் சுஜித் அவரது மகன் கவுசிக் இருவரும் மாஸ்.. சில படங்களில் நாயகனாக வந்த கெளசிக் இதில் முற்றிலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.. இவரைப் பார்த்தால் எரிச்சல் வரும் அளவிற்கு சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அதுபோல கனகு கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தி நம்மை கடுப்பேற்றி இருக்கிறார் சுஜித்..

நாயகி பாடினி கொஞ்ச நேரம் வந்தாலும் கதைக்கு சரியான இடத்தில் வருகிறார்..

முனிஷ்காந்த் அவரது குழு வந்தாலே சிரிப்புதான்.. ஹலோ கந்தசாமி, லேடி போலீஸ், அருள் டி.சங்கர், நடிகராகவே வந்த மன்சூர் அலிகான், சுந்தரேஸ்வரன் உள்ளிட்டோரும் பொருத்தமான தேர்வு..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்..

இசையமைப்பாளர் விகாஷ் படிஷா

படத்தொகுப்பாளர் ரேணு கோபால்..

மற்றும் சிறந்த நடிகர்கள்.. இந்த நான்கு துறைகளும்.. ஒரு காரில் நான்கு டயர்களைப் போல சரியாக அமைந்து இயக்குனர் என்ற வாகனத்திற்கு சரண்டர் ஆகி இருக்கின்றனர்..

இந்தத் திரில்லர் படத்தில் ஒரு பாட்டு இல்லை.. ரொமான்ஸ் இல்லை.. ஹீரோயின் இல்லை.. ஆனால் படத்தை முழுமையாக ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் கௌதமன் கணபதி..

இரண்டரை மணி நேரம் ஓடும் இந்த படத்தைப் பார்க்கும்போது உங்களது செல்போனை உங்களது பாக்கெட்டில் சரண்டர் செய்துவிடலாம்.. அது போல உங்களை திரையில் சரண்டர் செய்யலாம் என உறுதியாக சொல்லலாம்..


சின்ன விஷயமாக எதிர்பார்த்த பணத்தை சுவாரசியமாக முடித்துக் காட்டுவதும்.. துப்பாக்கி காட்சியை தூக்கலாக காட்டி அதை எளிதாக முடித்திருப்பது இயக்குனரின் மாஸ்டர் பீஸ் டச்..

காவல்துறையில் நடக்கும் அதிகாரிகளின் ஈகோ பிரச்சனை.. ரவுடிகளை மிரட்டும் அரசியல்வாதிகள்.. நேர்மையான போலீஸ் அதிகாரியின் நற்பண்பு.. இப்படியாக ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாக கணித்து திரைக்கதை அமைத்து ரசிகர்களை சரண்டர் செய்துவிட்டார் டைரக்டர் கௌதமன் கணபதி..

இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் வந்தால் அதையும் கண்டு ரசிக்க காத்திருப்போம்..

 

Surrender movie review