மாயக்கூத்து விமர்சனம்… எழுத்தாளரின் எழுச்சி
மாயக்கூத்து விமர்சனம்… எழுத்தாளரின் எழுச்சி
ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் டெல்லி கணேஷ், நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் ‘மாயக்கூத்து’
ஸ்டோரி…
கர்வமிக்க பிரபல எழுத்தாளர் வாசன்.. தான் ஒரு படைப்பாளி என்பதால் தன்னை கடவுளாக நினைத்துக் கொள்கிறார்.. இவர் ஒரு கட்டத்தில் இவரது கதாபாத்திரங்கள் கனவுலகில் சிக்கிக் கொள்கிறார்..
ஆனால் அந்த கதாபாத்திரங்களோ தங்களுடைய பிரச்சனைக்கு எல்லாம் இந்த எழுத்தாளர் காரணம் என ஆவேசத்தில் உலாவுகின்றன.. இதனை அடுத்து இந்த எழுத்தாளர் என்ன செய்தார்? அந்த கதாபாத்திரங்களின் நிலை என்ன.? என்பதெல்லாம் இந்த மாயக்கூத்து சொல்லும் கதை…

கேரக்டர்ஸ்…
எடிட்டராக டெல்லி கணேஷ், தனபாலாக சாய் தீனா, சிற்பியாக மு.ராமசாமி நடித்துள்ளனர்.. இவர்களை தவிர மற்றவர்கள் புதுமுகங்களே..
வாசனின் மனைவி இந்துவாக S.K.காயத்ரி.. இதில் கலகலப்புக்கு இவரின் உதவி பேருதவி.. கனவுகளைச் சுமக்கும் ராஜியாக மிருதுளா.. குழந்தையை இழந்தவராக ஐஸ்வர்யா ரகுபதி இதில் செல்வியாகச் நடித்துள்ளார். செல்வியின் கணவராக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்.. அனைவரும் தங்களது பங்களிப்பில் சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் அஞ்சனா ராஜகோபாலன், அனிமேஷன் செய்துள்ள அதிதி ஹரிகுமார், போஸ்டர் வரைந்திருக்கும் ஓவியர் ஜீவா ஆகியோரது பங்கு அருமை.
ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கியிருக்கிறார்.. ஒரு வித்தியாசமான கதை களத்தில் எழுத்தாளர் படைப்பாக இந்த மாயக்கூத்து ரசிகர்கள் பார்க்கும் கூத்தாக மாறி இருக்கிறது..
சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோருக்கும் இந்த படத்தில் மெசேஜ் கொடுக்கப்பட்டுள்ளது..
Maayakkoothu movie review

