ஃப்ரீடம் விமர்சனம்…

ஃப்ரீடம் விமர்சனம்…

ஃப்ரீடம் விமர்சனம்…

 

ஸ்டோரி…

1991 ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் வந்த போது மனித வெடிகுண்டால் கொடூரமாக கொல்லப்பட்டார்..

அப்போது தமிழகத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர்கள் மீது சந்தேகம் எழுந்தது.. அவர்களில் 45 பேரை விசாரணைக்காக தமிழக காவல்துறை அழைத்துச் சென்றது..

அதனை அடிப்படையாக வைத்து இந்த பீரீடம் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சத்யசிவா..

அவர்களை துன்புறுத்தி விசாரிக்கிறது காவல்துறை.. பல ஆண்டுகள் கடந்தும் அவர்கள் சிறையில் வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிக்க அவர்கள் திட்டம் போடுகின்றனர்.. அவர்களுக்கு உண்மையான ஃப்ரீடம் கிடைத்ததா.?என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

கடந்த சில ஆண்டுகளாகவே வித்தியாசமான கதைகளை அதேசமயம் தரமான படங்களில் தன்னை பொருத்தி கதையின் நாயகனாக வளர்ந்து வருகிறார் சசிகுமார்.. அதற்கு உதாரணமாக.. அயோத்தி – நந்தன் – டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களுடன் இந்த ஃப்ரீடம் படத்தையும் இணைக்கும் வகையில் படங்களை தேர்வு செய்திருக்கிறார் சசிகுமார்.. சபாஷ் சாரே..

சசிகுமாரின் மனைவியாக லிஜோமோல்.. மலையாள நடிகைகளுக்கே உரித்தான முக பாவனைகளில் நவரசங்களைக் காட்டி நடிப்பில் மிரள செய்திருக்கிறார் நாயகி லிஜோமோல்.. இவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் ஆணித்தரமான செம அடி.!

 

போலீஸாக நடித்த போஸ் வெங்கட், சத்யா உள்ளிட்ட நடிகர்களும் அனுபவ நடிப்பில் ஓகே..

போலீஸ் அதிகாரியாக சுதேவ்நாயர்.. தியேட்டரில் படம் பார்க்கும் நமக்கே இவர் மீது கோபம் வரும் வகையில் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்..

மகாராஜா படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து வியக்க வைத்த பாய்ஸ் மணிகண்டன் இதிலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. வாய் பேசாமல் தன் நடிப்பை பேச வைத்து விட்டார்..

வக்கீலாக மாளவிகா அவிநாஷ், போலீஸாக ரமேஷ் கண்ணா மற்றும் ராமசாமி உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பு சிறப்பு.

டெக்னீசியன்ஸ்…

ஜிப்ரானின் பின்னணி இசை ப்ரீடம் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.. தமிழர்களின் வலியை தன் இசை மூலம் கடத்திருக்கிறார்..

என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவு அருமை.. ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் ரசிக்க வைக்கிறது.. உதயகுமாரின் ஆர்ட் பணிகள் கதையுடன் ஒன்றி விட்டது..

சத்யசிவா படத்தை இயக்கியிருக்கிறார்.. மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர்.. என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழர்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்.. தமிழகத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்களை உணர்வு பூர்வமாக சொல்லி நம் மனதையும் ஈரமாக்கிவிட்டார்.. அதிலும் சசிகுமார் படும் வலி வேதனைகளை யதார்த்தமாக பதிவு செய்து நம் மனங்களை கலங்கடிக்க செய்திருக்கிறார் டைரக்டர் சத்யசிவா..

 

Freedom movie review