Mrs and Mr விமர்சனம்… மிஸ் பண்ணாம பார்க்கலாமா.??
Mrs and Mr விமர்சனம்… மிஸ் பண்ணாம பார்க்கலாமா.??
ஸ்டோரி…
40 வயதான வனிதாவும், 45 வயதான ராபர்ட்டும் பாங்காக்கில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் ஜாலியாக வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் வனிதாவை அனைவரும் ஏளனமாக பேச சரி இனியாவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கிறார் வனிதா.. ஆனால் ராபர்ட் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்
இதனால் பல ரொமான்ஸ் ஃபார்முலாவை பயன்படுத்துகிறார் வனிதா.. அடுத்தது என்ன நடந்தது என்பதை அடல்ட் கன்டென்ட் ஆக சொல்லி இருக்கிறார் டைரக்டர் வனிதா விஜயகுமார்..
கேரக்டர்ஸ்…
வனிதா, ராபர்ட், ஷகிலா, ஆர்த்தி, கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீமன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது..
வனிதா ஒரு நடிகையாகவும் ஒரு இயக்குனராகவும் நல்ல தேர்ச்சி பெற்று இருக்கிறார்.. காஸ்ட்யூம் கவர்ச்சி என்றாலும் கொஞ்சம் ஓவர் என்று சில காட்சிகளில் தோன்ற வைக்கிறது..
ராபர்ட்டும் வனிதாவுக்கு நன்றாகவே ஈடு கொடுத்து நெருக்கமாக நடித்திருக்கிறார்.. இவரது நண்பராக கணேஷ், வனிதாவுக்கு ஐடியா கொடுக்கும் ஆர்த்தியும் கலகலப்புக்கு கேரண்டி கொடுத்துள்ளனர்.
வனிதா, ஷகிலா, பாத்திமா பாபு, கும்தாஜ், சர்மிளா, வாசுகி என பலர் நடித்துள்ளனர்..
டாக்டர் சீனிவாசன் வேற நடுவில் வந்து இம்சை கொடுக்கிறார். வனிதா உறவினராக ஸ்ரீமன் வருகிறார்.

டெக்னீசியன்ஸ்…
இசை : ஸ்ரீகாந்த் தேவா
இயக்குனராக வனிதா ஓகே.. படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை என்பதால் படத்திற்கு மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடுகிறது..
பாங்காங் சீன்ஸ் ரொம்ப அழகு.. படம் போரடித்தாலும் பாங்காக் ரசிப்பதில் நமக்கு ஆர்வம் அதிகம்..
அடல்ட் படம் என்பதால் டபுள் மீனிங் காமெடி வேண்டும் என்பதால் சில டயலாக்குகளை வேண்டும் என்று திணித்ததாகவே தெரிகிறது..
திருமணமாகி 40 வயதான ஒரு பெண்ணுக்கு குழந்தை என்பது ஒரு பெரிய விஷயம் அதை அழகாக உணர்வு பெறுமாக சொல்ல வேண்டிய விஷயத்தை ஜாலியாக சொல்லி திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார் டைரக்டர் வனிதா
எடிட்டர் என்பவர் ஒரு படத்தின் தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும்.. ஆனால் இந்த படத்தில் ஏகப்பட்ட தேவையற்ற காட்சிகள் இருப்பதை இயக்குனரும் கவனிக்கவில்லையா.?
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான போது இந்த அடல்ட்டுக்கான படம் தான் என்று நமக்கு தெரிந்த விஷயம்தான் ஆனால் அதற்காக ஒரு லாஜிக் கூட இல்லாமல் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கு..

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ஓகே ஆட்டமும் போட வைக்கும்.. கிரணின் ராத்திரி சிவ ராத்திரி ரீமிக்ஸ் பாடல் சிறப்பு.. அதில் கிரனின் கவர்ச்சி கிறங்கடிக்க வைக்கும்..
வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார்.. கதை நாயகியாக நடித்து வனிதாவை இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.. அதே சமயம் இவர்கள் குடும்பத்திற்கா ஒரு படம் என்று சொல்லப்பட்டாலும் திரைக்கதையிலும் காட்சி அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படத்தை மக்கள் வெகுவாக ரசித்து இருப்பார்கள்..
இந்தப் படக்குழுவினர் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கும்போது ஜாலியாக போனோம்.. ஜாலியாக வந்தோம் என்று சொல்வார்கள். அதே போல தான் அவர்கள் ஜாலியாக இருந்தார்கள்.. ஆனால் படத்தை பார்க்கும் மக்கள் அப்படி ஏற்றுக் கொள்வார்களா.??
Mrs and Mr movie review

