குயிலி விமர்சனம்… குடியால் குடியை தொலைத்த குயிலி

குயிலி விமர்சனம்… குடியால் குடியை தொலைத்த குயிலி

 

குயிலி விமர்சனம்… குடியால் குடியை தொலைத்த குயிலி

 

ஸ்டோரி…

தன் காதலித்தவனையே திருமணம் செய்து எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் நாயகி குயிலி.. ஒரு கட்டத்தில் குடிகார நபர்களால் இவரது கணவருக்கும் குடிப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது.. அப்போது நடந்த ஒரு தகராறில் இவர் கொல்லப்படுகிறார்.

இதனால் குடியை எதிர்த்து போராடுகிறார் குயிலி.. அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும் என்பதற்காக தன் மகனை ஒரு கலெக்டர் ஆக்கி அழகு பார்க்கிறார்.. ஆனால் மகனும் தடம் மாறுகிறார்..

அதன் பிறகு ஒரு தாயாக இவர் எடுத்த முடிவு என்ன.? அவருக்கு சரியான தீர்வு கிடைத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

தஷ்மிகா லட்சுமணன், காதல், கல்யாணம் என சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.. தஷ்மிகா லிசி ஆண்டனியாக மாறி போகிறார். (முதிர்ச்சி கேரக்டர் ) அதன் பின்னர் இவர் மதுவை எதிர்த்து போராடும் வீரமங்கையாக ஜொலிக்கிறார்.. அதே சமயம் மகனை எதிர்த்து போராடும் ஒரு தாயாகவும் நாட்டுக்காக போராடும் ஒரு பெண்மணியாகவும் ஜொலிக்கிறார்..

இவர்களுடன் ரவிசா, புதுப்பேட்டை சுரேஷ், அருண்குமார் என கதாபாத்திரங்களின் எதார்த்த நடிப்பு சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

சின்ன பட்ஜெட் படங்களின் ஒளிப்பதிவும் இசையும் ஒரு சில படங்களில் பாஸ்மார்க் பெறுகின்றன.. அந்த வகையில் இந்த குயிலி படமும் பாஸ் மார்க் பெறுகிறது..

பிரவீன் ராஜின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. ஜோ ஸ்மித்தின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்..

முருகசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். குடியால் குடும்பத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் ஒரு குடும்பஸ்தனுக்கும் இந்த படம் சமர்ப்பணம்.

மதுவுக்கு எதிராக பல படங்கள் வந்து கொண்டிருந்தாலும் மதுவுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படும்போது இதற்கான முடிவு என்ன என்பது தெரியாத ஒன்றுதான்..

ஆனால் அதே சமயம் மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் குடிகாரன் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.. காரணம் குடிகாரன் திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது..

அதே சமயம் அரசும் குடிகாரன் மேல் பழியை சுமத்தாமல் ஒரு பொறுப்பான அரசாக மாறினால் மட்டுமே நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Kuyili movie review