DNA – டி என் ஏ விமர்சனம்..

DNA – டி என் ஏ விமர்சனம்..

DNA – டி என் ஏ விமர்சனம்..

ஸ்டோரி….

காதல் தோல்வியால் போதைக்கு அடிமை ஆகிறார் நாயகன் அதர்வா.. எனவே அவருக்கு எப்படியாவது வேறு ஒரு பெண்ணுடன் அவசர திருமணத்தை நடத்தி வைத்தாக வேண்டும் என முடிவெடுக்கிறார் தந்தை சேத்தன்.

அப்போது பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிசார்டர் என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட நாயகி நிமிஷாவை திருமணம் செய்து வைக்கின்றனர்..

இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும்போது நிமிஷாவுக்கு குழந்தை பிறக்கிறது.. ஆனால் அந்த குழந்தை யாரோ ஒரு நபரால் திருடப்படுகிறது.. வேறு ஒரு குழந்தையை கொடுத்து இது நிமிஷாவின் குழந்தைதான் என்று சொல்லும்போது.. “என் குழந்தை எனக்கு தெரியாதா என மறுக்கிறார்..

ஆனால் அவருக்கு ஏற்கனவே மனநோய் இருப்பதால் அது நிமிஷா குழந்தை தான் என்று பலரும் சொல்லி வருகின்றனர்..

இந்த சூழ்நிலையில் அதர்வா என்ன செய்தார்.? குழந்தை எங்கே சென்றது குழந்தையை கடத்தியவர் யார்?என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

காதல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் ஆதரவா மெல்ல மெல்ல மீண்டு அதன் பின்னர் மனைவிக்காக உருகும் காட்சிகளில் அசத்தல் அதர்வாக மாறியிருக்கிறார்..

சித்தா, ஜிகர்தண்டா xx உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வாரி வழங்கிய நிமீஷா சஜயன் இந்த படத்திலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.. சின்ன சின்ன நிமிடங்களில் கூட தன் முக பாவனைகளில் தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார் நிமிஷா..

குழந்தையை திருடும் அந்தப் பாட்டி கேரக்டர் கூட பயங்கரமான தேர்வு தான்.. மேலும் சேத்தன், விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், உள்ளிட்டோரும் நல்ல தேர்வு..

 

டெக்னீசியன்ஸ்…

ஜிப்ரான் இசையமைக்க பார்த்திபன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. இருவரும் தங்கள் பணிகளில் நேர்த்தி..

ஒரு நாள் கூத்து மான்ஸ்டர் பர்ஹானா என்று தரமான குடும்ப படங்களை எடுத்தவர் நெல்சன் வெங்கடேசன்.. இந்த படத்தில் இயக்கி இருக்கிறார்..

இடைவேளைக்குப் பிறகு இன்வெஸ்டிகேஷன் திரில்லராக செல்லும் இந்த திரைக்கதையில் பல ஹீரோயிசத்தை தவிர்த்து இருக்கலாம்.. அதர்வாவும் பாலாஜி சக்திவேலும் சென்று நரபலியை தடுக்கும் காட்சிகள் நம்பும் படியாக இல்லை.

திரைக்கதை அமைத்த விதத்தில் சில சறுக்கல் இருந்தாலும் கிளைமாக்ஸில் 25 நிமிடங்கள் ஆடியன்ஸை ஆச்சரியப்பட வைக்கிறார் டைரக்டர் நெல்சன்.

பல நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பூசி தவறு என்று சொல்லும் காட்சியில் இயக்குனர் எதைக் குறி வைக்கிறார் என்பது புரியவில்லை???

சில உணர்வுபூர்வமான தருணங்களை காட்சியாக அமைத்து தாய்மார்களை கவர செய்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

Atharva Nimisha starring DNA review