Eleven லெவன் விமர்சனம்..: த்ரில்லர் பயணம்
Eleven லெவன் விமர்சனம்..: த்ரில்லர் பயணம்
ஸ்டோரி…
சென்னையில் தொடர் கொலைகள் நடக்கிறது.. அனைத்தும் ஒரே மாதிரியான கொலை குற்றங்களாக இருந்தாலும் குற்றவாளி யார் என்பதை தெரியாமல் போலீஸ் திணறுகிறது…
இதனையடுத்து இந்த பொறுப்பை நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கிறார் உயர் அதிகாரி ஆடுகளம் நரேன். ஆனாலும் கொலைகள் நின்ற பாடு இல்லை.
எனவே காவல்துறை என்ன செய்தது.? கொலையாளி யார்.? அதற்கான காரணம் என்ன என்பதுதான் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
போலீஸ் ட்ரைனிங்லிருந்து ரிட்டன் ஆனவர் போல நவீன் சந்திரா.. இந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. அவரது பாடி லாங்குவேஜ் பக்கா..
இவருடன் திலீபன் உதவி ஆய்வாளராக அவரும் தன் பணியில் கெத்து காட்டியிருக்கிறார்.. அபிராமி கேரக்டர் சூப்பர்.. எதிர்பாராத ஒன்று..
இவர்களுடன் ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாமராஜு, ஆடுகளம்’ நரேன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
டி. இமான் – இசை.. இதனால் வரை பாடல்களில் நம்மை கவர்ந்த இமான் இதில் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. திரில்லர் கதைக்கு இவரது இசை உயிரோட்டம்..
கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு வேற லெவல்..
இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்.. ஒரு க்ரைம் திரில்லர் படத்திற்கான திரைக்கதையை முழுமையாக இன்ச் பை இஞ்சாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொடுத்து கையாண்டிருக்கிறார் இயக்குனர்..
இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் என்று இவரே சொன்னாலும் நம்மால் நம்ப முடியவில்லை.. சுந்தர் பாணி எந்த விதத்திலும் பயன்படுத்தப்படவில்லை..
ஆக லெவன்.. த்ரில்லர் பயணம்
Eleven movie review

