ரெட்ரோ விமர்சனம்.. சூர்யாவின் ஆக்சன் ட்ரீட்
ரெட்ரோ விமர்சனம்.. சூர்யாவின் ஆக்சன் ட்ரீட்
ஸ்டோரி…
தூத்துக்குடியில் மிகப்பெரிய டான் ஜோஜு ஜார்ஜ.. இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் மனைவி ஆசைப்படி சூர்யாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.. தந்தையைப் போல சூர்யாவும் ஒரு கட்டத்தில் மிகப்பெரிய டானாக உருவெடுக்கிறார்…
இவருக்கு 35 வயதை நெருங்கும் வேளையில் காதலி பூஜாவின் அன்பு கட்டளைப்படி ரவுடியிசத்தை விட முயற்சிக்கிறார்..
அந்த சமயத்தில் இவரிடம் இருக்கும் தங்க மீன்கள் ரகசியத்தை ஜோஜு & பிரகாஷ்ராஜ் கேட்க அந்த ரகசியத்தை தர மறுக்கவே தந்தைக்கும் மகனுக்கும் மோதல் வெடிக்கிறது.. இதனிடையில் அந்தமான் சென்று காதலியை தேடி அலையும் கதையும் நீள்கிறது..
அதன் பிறகு என்ன ஆனது? மீண்டும் டானாக மாறினாரா? காதலிக்காக அமைதி காத்தாரா? சிரிப்பு வழியில் புத்தராக மாறினாரா அல்லது ஆயுதம் எடுத்து கிருஷ்ணராக மாறினாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
அயன் படம் போல பல்வேறு கெட்டப்புகளில் வந்து தெறிக்க விட்டுள்ளார் சூர்யா.. அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு ஏற்ப தன் உடலை முறுக்கேற்றி ரெட்ரோவுக்கு பலம் சேர்த்துள்ளார்.. சிரிக்க மறந்து சீரியஸாக இடைவேளை வரை கடந்து மெல்ல சிரித்த முகத்துடன் மாறும் காட்சிகளில் சூர்யா ஸ்மார்ட்..
இதுவரை பார்க்காத ஹோம்லி கேரக்டரில் பூஜா ஹெக்டே.. கண்களில் கருணை.. இதழ்களில் இளமை காட்டி ஈரக்கிறார்..
வில்லனாக மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ்.. தன் உருவத்தைப் போலவே நடிப்பிலும் உயரம் தொட்டிருக்கிறார்..
தங்க மீனுக்காக போராடும் பிரகாஷ்ராஜ் கேரக்டருக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கலாம்..
சிரிப்பு டாக்டராக ஜெயராம் மற்றும் மற்ற வில்லன் நடிகரும் சுவாரசியம் கொடுத்துள்ளனர்..
ஒரே ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு இளசுகளை சூடேற்றி செல்கிறார் ஸ்ரேயா..
ரஞ்சித் பட கம்பெனி ஆர்டிஸ்ட் போல கார்த்திக் சுப்புராஜ் கம்பெனி ஆர்டிஸ்டிட் பயன்படுத்துகிறாரோ.? கருணாகரன், கஜராஜ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்டோரும் உண்டு.

டெக்னீசியன்ஸ்…
கலைப் பணிகளை ஜாக்கி மற்றும் மாயப்பாண்டி மேற்கொண்டுள்ளனர்.. சுபீர் காஸ்ட்யூம் டிசைன் கவனித்துள்ளார்..
1960களில் கதை தொடங்கி 1993 & 1998 வரை நடக்கும் கதைகளமாக இந்த ரெட்ரோ திரைப்படம் அமைந்துள்ளது.. எனவே அதற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் மற்றும் ஆர்ட் ஒர்க் அனைத்தும் அற்புதம்.. ஆடை வடிவமைப்பு & பழைய பொருட்கள் மற்றும் அதற்கு ஏற்ற லைட்டிங் என அனைத்திலும் பிரம்மாண்டமாக கொடுத்திருக்கின்றனர்..
சந்தோஷ் நாராயணனின் இசையில் கனிமா பாடல் செம.. அந்தப் பாடலுடன் இடை இடையே வசன காட்சிகளும் இடம் பெறுவதால் ‘கனிமா..’ நீண்ட நேரம் ஆட்டம் போட வைக்கும்.. இந்தப் பாடலைப் இதற்கு முன்பு வீடியோவில் பார்த்து ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம் இருந்திருக்கும்.. சூர்யா ஏன் சீரியஸாக காணப்படுகிறார் என்பதற்கு படத்தில் விளக்கம் இருக்கு..
சூர்யா மற்றும் வில்லன் ஆகியோருக்கு போடப்பட்டுள்ள பின்னணி இசை தீம் மியூசிக் மிரட்டல் ரகம்
ஸ்ரேயாஸ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.. 1990களில் பார்த்த காட்சிகளை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.. அந்தமான் காட்சிகள் அழகோ அழகு..
குறும்படங்கள் இயக்கி தன் வாழ்க்கையை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்.. ஏனோ படம் இயக்கும்போது மட்டும் 3 மணி நேரத்திற்கு ஏன் இயக்கி வருகிறார் என்பதுதான் கேள்விக்குறி.. பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு உயிர் நாடி என்றாலும் அதனை ட்ரிம் செய்திருந்தால் கூடுதல் சுவாரஸ்யத்தை ரெட்ரோ கொடுக்கும்..
ஷபிக் முகமது அலி என்பவர் எடிட்டிங் செய்து இருக்கிறார்.. இவர் மெனக்கெட்டு பட நீளத்தை குறைப்பது நலம்..
சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் சூர்யா ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ட்ரீட்..
தான் ரஜினி ரசிகர் என்பதால் இடையே செனோரீட்டா பாடலையும் பயன்படுத்தி (காப்பிரைட்ஸ் அனுமதி பெற்று..) ரஜினி ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்..
வழக்கமான டான் வாழ்க்கை.. தந்தை – மகன் பாசம்.. ரொமான்ஸ்.. அம்மா சென்டிமென்ட் என வழக்கமான டெம்ப்ளேட்டில் கதையை நகர்த்தி இருந்தாலும் முதல் பாதி விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை..
ஆக இந்த ரெட்ரோ மூலம் சூர்யா ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
Suriya starring Retro movie review

